Header Ads



கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பப்போகும், பிரதமர் ரணிலின் சகோதரர் - ரசிகர்கள் கோபம்

எதிர்வரும் 24ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ள கிண்ண கிரிக்கட் போட்டிகளின் நேரடி ஒலி ஒளிபரப்பு உரிமை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சகோதரருடைய டிஎன்எல் தொலைக்காட்சிக்கு வழங்கப்பட்டுள்ளமை குறித்து பலரும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

அரசியலை மையமாகக்கொண்ட அடிப்படையில் இல்லாமல் டிஎன்எல் தொலைக்காட்சியின் தெளிவின்மை தொடர்பிலேயே இந்த அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

“டிஎன்எல் தொலைக்காட்சியின் இணையத்தில் தமது சேவை நாடு முழுவதும் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. எனினும் பல இடங்களிலும் அந்த தொலைக்காட்சி சேவை தெளிவற்றதாகவே உள்ளதாக ரசிகர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

முன்னைய அரசாங்கத்தில் மஹிந்த ராஜபக்சவுடைய மகன் யோசித்தவின் தொலைக்காட்சியான சிஎஸ்என் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் உரிமத்தை பெற்று விளையாட்டுப் போட்டிகளை நேரடி ஒலி ஒளிபரப்பு செய்துவந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு வந்தது.

இந்தநிலையில் பிரதமர் ரணிலின் மூத்த சகோதரர் ஷான் விக்கிரமசிங்கவின் டிஎன்எல் தொலைக்காட்சிக்கு ஆசிய கிரிக்கெட் உரிமம் வழங்கப்பட்டுள்ளமை குறித்து பலரும் வியப்பை வெளியிட்டுள்ளனர்.

1 comment:

  1. அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

    ReplyDelete

Powered by Blogger.