மஹாத்திர் மொஹமத்திற்கு சிறைத் தண்டனையா..?
மலேசியாவின் முன்னாள் பிரதமர் மஹாத்திர் மொஹம்த் நாட்டின் தலைமை அரச வழக்கறிஞரை அவதூறு செய்யும் நோக்கில் தொடர்ச்சியாக எழுதிவந்தார் எனும் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
தலைமை அரச வழக்கறிஞர் மொஹமத் அபாண்டிக்கு "எவ்வித நம்பகத்தன்மையும் கிடையாது" என விமர்சித்து மஹாத்திர் மொஹமத் தொடர்ச்சியாக வலைத்தளங்களில் எழுதிவந்தார்.
நாட்டின் பிரதமர் நஜீப் ரசாக் மீதான குற்றச்சாட்டு குறித்த விசாரணைகளை முன்னெடுக்கத் தேவையில்லை என்று தலைமை அரச வழக்கறிஞர் எடுத்த முடிவையே மஹாத்திர் மொஹமத் தனது வலைத்தள பதிவுகளில் விமர்சித்திருந்தார்.
பிரதமர் நஜீப் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்த 681 மில்லியன் டாலர்கள் ஊழல் பணமே எனக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
ஆனால் அந்தப் பெருந்தொகையானப் பணம், சவுதி அரச குடும்பம் அளித்த நன்கொடை எனக் கூறி ஊழல் குற்றச்சாட்டிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
எனினும் அதில் பெரும்பாலானப் பணம் திருப்பியளிக்கப்பட்டது.
அவதூறு வழக்கில் மஹாத்திர் மொஹமத் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால், முன்னாள் பிரதமரான அவருக்கு இரண்டு ஆண்டுகள்வரை சிறை தண்டனை கிடைக்ககலாம்.
Post a Comment