Header Ads



கம்பளையில் சிறுவர், கொள்ளைக் கும்பல் கைது

கம்பளையைக் கலக்கிக் கொண்டிருந்த சிறுவர் கொள்ளைக் கும்பல் ஒன்றைக் கைது செய்து பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக கம்பளை பிரதேசத்தில் ஐந்துபேரைக் கொண்ட கொள்ளைக் கும்பல் ஒன்று தனியாக வீட்டில் இருக்கும் பெண்களைக் குறிவைத்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்திருந்தது.

கத்தி முனையில் அச்சுறுத்திபெண்களின் நகைகளை பறித்துச் செல்வது, மொபைல் போன் திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

நிஞ்சா பாணியில் முகத்தை முழுமையாக மறைத்துக் கொண்டு கொள்ளையடித்த இந்தக்கும்பல் காரணமாக கம்பளை பிரதேசத்தில் பெரும் அச்சம் ஒன்று பரவியிருந்தது.

இந்நிலையில் குறித்த நிஞ்சா குழுவினரை கம்பளை பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 17,18, 19, 20 வயதுப் பருவங்களில் உள்ள இளைஞர்கள் என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கம்பளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களை எதிர்வரும் 17ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

1 comment:

  1. பருவமடையாதவர்கள் என்று விடுதலை செய்ய மாட்டார்களா?

    ReplyDelete

Powered by Blogger.