ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு மீது, முஸ்லிம் கல்வியாளர்கள் சாடல்
ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் செயல்கள், இஸ்லாத்துக்கு விரோதமாக உள்ளது' என முஸ்லிம் கல்வியாளர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சர்வதேச மாநாடு:
தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது. தலைநகர் ஐதராபாத்தில், இந்தியா, சவுதி அரேபியா, கத்தார், நேபாளம், இலங்கை, வங்கதேசம், தென்னாப்ரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த, 300க்கும் அதிகமான முஸ்லிம் கல்வியாளர்கள் பங்கேற்ற சர்வதேச மாநாடு, மூன்று நாட்கள் நடந்தது.
ஆதரவு கூடாது:
மாநாட்டில் முடிவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
*உலகையை அச்சுறுத்தி வரும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் செயல்பாடுகள், இஸ்லாத்துக்கும், மனித நேயத்துக்கும் முற்றிலும் விரோதமாக உள்ளன
*அப்பாவி மக்களை கொல்வதை, இஸ்லாம் ஒரு போதும் ஆதரிக்காது.அதனால், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு, முஸ்லிம்கள், குறிப்பாக இளைஞர்கள் சிறிதும் ஆதரவு தரக் கூடாது
* எல்லா மதங்களையும், ஐ.நா., சபை ஒன்றாக மதிக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினரின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டால், அதை வன்மையாக கண்டிக்க வேண்டும்
* பாதிக்கப்பட்ட பிரிவினரின் செயல்களை கண்டிப்பது தான், வழக்கமாக உள்ளது. இதுதான், பாதிக்கப்பட்ட மக்களின் மனதில், வன்முறை மற்றும் விரோதத்தை துாண்ட காரணமாக உள்ளது. இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
It is regretable the criticism has been limited to ISIS, other extremist groups like Taleban and numerous other extreme interpretations of islamic concepts should have been commented on.
ReplyDelete