Header Ads



சபாநாயகருக்கு மரண அச்சுறுத்தல்: விசாரணைகள் ஏன் இடைநிறுத்தம்..?

சபாநாயகருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பாக விசாரணைகள் ஏன் இடைநிறுத்தப்பட்டுள்ளன? அச்சம்பவத்துடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரும் அவரது நண்பரும் தொடர்புபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளமைதான் அதற்கான காரணமாவென பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினராகிய நாம் எமது சுயாதீனமான செயற்பாட்டுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். எம்மை ஏற்றுக்கொள்ள வேண்டுமென சபாநாயகராகிய உங்களிடம் கோரிக்கை விடுத்த போது உங்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அறிவித்தீர்கள். 

அதன்போது எமது சகபாடியான டலஸ் அழகப்பெரும எம்.பி. தங்களுக்கு விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல் தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு  இந்த சபையில் அதனுடன் தொடர்புபட்டவர்கள் யார் என்பதை பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமெனக் கோரினார். 

ஆனால் தற்போதுவரையில் அது தொடர்பிலான எந்தவிதமான விசாரணைகள் நடைபெறுகின்றன. யார் தொடர்புபட்டிருக்கின்றார்கள் என்பது பகிரங்கப்படுத்தப்படவில்லை. 

தங்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தலானது முழுப்பாராளுமன்றத்திற்கும் விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தலாகவே நாம் பார்க்கின்றோம். 

அவ்வாறிருக்கையில் தற்போதுவரைவில் ஏன் அச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை பகிரங்கப்படுத்தாது இருக்கின்றீர்கள்?. 

தாங்கள் அச்சுறுத்தலுக்கு மன்னிப்பளித்து விட்டதாகவும் பத்திரிகைச் செய்தியொன்று உள்ளது. 

இதன்போது குறிக்கீடு செய்த சபாநாயகர், இல்லை அவ்வாறான தகவல் தவறானது. நான் யாருக்கும் மன்னிப்பு அளிக்கவில்லையென்றார்.  

தொடர்ந்து கருத்து வெளியிட்ட வாசுதேவ எம்.பி நீங்கள் அவ்வாறு மன்னிப்பளிக்கவில்லையென்றால் ஏன் விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. 

அந்தச் சம்பவத்துடன் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தொடர்புபட்டுள்ளமையாலா? அவ்வாறு விசாரணைகளை இடைநிறுத்தியுள்ளீர்கள்? என்றும் கேள்வியெழுப்பினார். s

No comments

Powered by Blogger.