Header Ads



ஹூசைன் வந்தபோது அசெளகரியம் ஏற்படுத்திய, விமல் வீரவன்சவை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச உள்ளிட்ட 7 பேரை அடுத்த மாதம் 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இன்று அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கறுவாத்தோட்டம் பொலிஸார் நீதிமன்றத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இன்று அதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் ராத் அல் ஹூசைன் நாட்டிற்கு வருகை தந்த சந்தர்ப்பத்தில், விமல் வீரவங்ச தலைமையிலான குழு கடந்த 6 ஆம் திகதி கொழும்பு ஹெவ்லொக் பகுதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியதுடன் அனுமதியின்றி ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி மக்களை அசெளகரியத்திற்கு உள்ளாக்கியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீதிச்சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கக்கூடிய குற்றமிழைக்கப்பட்டுள்ளதாக இவர்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஜயந்த சமரவீர, வீரகுமார திஸாநாயக்க, பியசிறி விஜேநாயக்க, மொஹமட் முஸம்மில், ரொஜர் செனவிரத்ன, டொன் லிசுயா ஆகியோருக்கே நீதிமன்றம் அறிவித்தல் பிறப்பித்துள்ளது.


No comments

Powered by Blogger.