முஸ்லிம்களுக்கென விழிப்புணர்ச்சியின் அவசியமும், தேவையும் இன்று உணரப்பட்டுள்ளது - ஹலீம்
-இக்பால் அலி-
இன்று சமூகத்திற் மத்தியில் எல்லா வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தக் கூடிய கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். முஸ்லிம்களுக்கென விழிப்புணர்ச்சியின் அவசியமும் தேவையும் இன்று எல்லோராலும் உணரப்பட்டுள்ளது. இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் புதிய செயற் திட்டத்தின் வடிவமாக உடத்தலவின்னை ஜமாமிஉல் அஸ்ஹர் பாடசாலை ஏற்பாடு செய்த மரதன் ஓட்டப் போட்டி முக்கியத்துவம் வாய்ந்த சிறந்தொரு செயற் திட்டமாகும். புது இரத்தம் பாய்ச்சக் கூடியதாகவும் உள்ளன. இது இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்பாடுத்தும் விளையாட்டுமட்டுல்ல ஆராக்கியமான நல்வாழ்வுக்கும் உடல் , மன எழுச்சிக்கு உகந்த ஒன்று. சோம்பலும் உதாசீனமும் முன்னேற்றத்தின் எதிரிகளாகும். சோம்பலை அகற்றி உதாசீனத்தை இல்லாமற் செய்து எதையும் அர்ப்பணிப்புடன் செயற்படுத்தல் வேண்டும் என்று முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.
கண்டி உடத்தலவின்னை ஜாமிஉல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் ஏற்பாட்டில் இன ஐக்கியத்தை ஏற்படுத்தும் வகையில் பொது மரதன் ஓட்டப் போட்டி பாடசாலை அதிபர் ஏ, ஆர். எம். உவைஸ் தலைமையில் சனிக்கிழமை 27-02-2016 நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் அங்கு இவ்வாறு இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்
இப்பாடசாலையின் அதிபர் ஒரு சிறந்த ஆசிரியராகவும் அதிபராகவும் செயற்படக் கூடியவர். சோம்பலும் உதாசினமும் அவரிடத்தில் இல்லை என்பதைக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். அவர் எதையும் எடுத்த காரியத்தை சுறுசுறுப்புடன் செய்து முடிப்பவர். அவர் ஒரு புதுமையான செயற் திட்டத்தை ஏனயை பாடசாலைக்கு முன்னுதாரணமாக பல்லின மக்கள் கலந்து கொள்கின்ற விளையாட்டுப் போட்டி ஒன்றை ஒழுங்க செய்துள்ளார். இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய இப்பிரதேசத்திலுள்ள அனைத்து மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
விசேடமாக இந்தப் புதிய அரசாங்கம் வரலாற்றிலேயே கல்விக்காக பெருந்தொகை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எமது தேசிய வருமானத்தில் சுமார் 5.8 விகிதமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் பல சிறந்த வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவிவுகளிலும் இரு பாடசாலைகள் தெரிவு செய்து பாரியளவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. அந்த வகையில் இந்தப் பாடசாலையும் உள்வாங்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. அதேவேளை இங்கு கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ள பாடசாலை மைதானத்தின் அபிவிருத்தி தொடர்பாக நான் ஏற்கெனவே விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிரி ஜயசேகரவுடன் கதைத்துள்ளேன். எனவே சிறந்தொரு பாடசாலையாக உருவாக்குவதற்கு தன்னால் இயன்ற உதவிகளை வழங்கவுள்ளேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிராமத்தைச் சுற்றி சுமார் கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்ற போட்டியில் இராணுவ வீரர்களும் பிற சகோதர மொழி சிங்களப் பாடசாலை மாணவர்கள், முஸ்லிம் பாடசாலை மாணவர்கள், விளையாட்டுக்கழகங்களைச் சேர்ந்த வீரர்கள். பாடசாலையின் இல்ல விளையாட்டு கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் என சுமார் 150 பேர் அளவில் பங்கு கொண்டனர். இந்நிகழ்வில் மற்றுமொரு அம்சமாக இப்பிரதேசத்திலிருந்து தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு பாரம் தூக்குதல் போட்டியில் வெண்கல் பதக்கத்தை வென்ற வீரரை கௌரவிக்கும் வகையில் அவருடைய தாயாருக்கு விருது நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் இராணுவ வீரர்களான சீ. பீ. அலஹகோன் முதலாம் இடத்தையும் ஈ. என்.எஸ். பீ. ஏக்கநாயக்க இரண்டாம் இடத்தையும் வந்தடைந்தனர். மத்திய மாகாண சபை உறுப்பினர்களான முத்தலீப் ஹாஜியார், லாபீர் ஹாஜியார், ஹிதாயத் சத்தார் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள பலர் கலந்து கொண்டனர்.
Verygood.but dont forget your area akurana national school.alreadt worst our school.pls consider our akurana central college matter very serious.
ReplyDelete