Header Ads



"மூழ்கிய படகின் நுனியில் நின்றபடி, நடுக்கடலில் தவித்துகொண்டிருந்த அகதி"


மூழ்கிய படகின் நுனியில் நின்றபடி நடுக்கடலில் தவித்துகொண்டிருந்த அகதியை கடற்படையினர் உலங்குவானூர்தி மூலம் மீட்டனர். 

துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டின் லெஸ்போஸ் தீவிகளுக்கு செல்வதற்காக கடந்த திங்களன்று 34 அகதிகள் படகில் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இஜியன் கடலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது திடீரென படகு தண்ணீரில் கவிழ்ந்துள்ளது.

இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர். படகின் நுனி மட்டுமே வெளியில் தெரிந்த நிலையில் அகதி ஒருவர் அதனை பற்றிக்கொண்டு இருந்துள்ளார்.

நீண்ட நேரம் நடுக்கடலில் தன்னந்தனியாக அவர் தவித்து வந்துள்ளார்.

இந்நிலையில் உலங்குவானூர்தி மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த துருக்கி கடற்படையினர், அகதி ஒருவர் கடலில் தவித்துவருவதை பார்த்துள்ளனர்.

உடனடியாக கடற்படையை சேர்ந்த வீரர் ஒருவர் உலங்கு வானூர்தியில் இருந்து கயிறு மூலம் கடலில் குதித்துள்ளார்.

பின்னர் அகதியின் அருகே சென்ற வீரர், பத்திரமாக கயிறு மூலம் அவரை  மீட்டுள்ளார். இது தொடர்பான காட்சிகளை துருக்கி கடற்படையினர் வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக படகு கடலில் கவிழ்ந்த விபத்தில் 27 பேர் பலியாகியுள்ளதாகவும் 6 பேர் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.