சிகிச்சைக்கு டாக்டரிடம் சென்ற, செல்போனில் பேசிய பெண்ணுக்கும் சவுக்கடி - தலிபான்கள் தண்டனை
ஆப்கானிஸ்தானில் சிகிச்சை பெற டாக்டரை சந்தித்த பெண்ணுக்கு தலிபான் தீவிரவாதிகள் சவுக்கடி தண்டனை வழங்கினார்கள்.
ஆப்கானிஸ்தான் கிராம பகுதியில் பொதுமக்கள் முன்னிலையில் ஒரு பெண்ணுக்கு சவுக்கடி தண்டனை வழங்கும் காட்சி ஆன்லைனில் வீடியோ ஆக ஒளிபரப்பாகிறது. அப்பெண் உடல் முழுவதும் ரத்தம் கொட்டிய நிலையில் நின்று கொண்டிருந்தார்.
இக்காட்சி பார்த்த அனைவரின் மனதை மிகவும் பதறச் செய்தது. உடல் நலக் குறைவால் அவதிப்பட்ட அந்த பெண் டாக்டரை பார்க்க சென்றார். அவருடன் பாதுகாப்புக்காக மைத்துனர் சென்று இருந்தார்.
ஆப்கானிஸ்தான் கிராமப் புறங்களில் பெண்கள், கணவர் மற்றும் உறவினர்கள் துணையின்றி தனியாக வெளியில் செல்லக்கூடாது. மீறி வேறு ஒரு ஆண் நபருடன் சென்றால் அது குற்றமாக கருதப்படும்.
அதே நிலைதான் இந்த பெண்ணுக்கும் ஏற்பட்டது. டாக்டரை பார்க்க அவருடன் சென்ற ஆண் நபர் உறவினர் அல்ல என தவறாக புரிந்து கொண்டனர். அவர் வேறு ஒருவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டு ஓட்டம் பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு தலிபான் தீவிரவாதிகள் இத்தண்டனை அளித்தனர்.
இருந்தும் இச்செயலில் ஈடுபட்ட தலிபான் தீவிரவாதி மீது போலீசில் யாரும் புகார் செய்யவில்லை.
இதே பகுதியில் கடந்த வாரம் ஒரு பெண்ணுக்கு சவுக்கடி தண்டனை வழங்கப்பட்டது. ஏனெனில் செல்போனில் வேறொரு ஆண் நபருடன் பேசியதற்காக இத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.
Post a Comment