"எல்லை நிர்ணயம் தொடர்பில், யோசனைகளை முன்வையுங்கள்"
உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பில் மக்களின் முறைப்பாடுகள் மற்றும் யோசனைகளைப் பெறும் நடவடிக்கைகள் எதிர்வரும் 20ம் திகதி நிறைவடையவுள்ளதாக உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு, உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பில் மக்களின் முறைப்பாடுகள் மற்றும் யோசனைகளைப் பெற குழுவொன்று அமைக்கப்பட்டது.
இதேவேளை, அதே வருடம் நவம்பர் மாதம் 30ம் திகதியுடன் குறித்த குழுவின் நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்ட காலம் நிறைவடைந்த போதிலும் இன்னும் யோசனைகள் மற்றும் முறைப்பாடுகள் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை தொடர்வதாக தெரியவந்துள்ளது.
இந்தநிலையில் குறித்த குழுவினால் முறைப்பாடுகள் மற்றும் யோசனைகளை ஏற்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் 20ம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
எனவே, மேலும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பில் மக்களின் முறைப்பாடுகள் மற்றும் யோசனைகள் இருக்குமானால் அதனை குறித்த திகதிக்கு முன்னர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Post a Comment