Header Ads



ஹசனலியிடம் சில கேள்விகள்...!

-ஜஹங்கீர்-

செயலாளர் அவர்களே.. சில தினங்களுக்கு முன்னர் ஊடகங்களுக்கு ஒரு செய்தி சொல்லி இருந்தீர்கள். அதில் முரணான எல்லை நிர்னயங்கள் செய்த பின்னரே தேர்தல்! இறுதித் தீர்மானக் குழுவில் தலைவரும் இருக்கின்றார்! என்று சமூகத்திற்கு நம்பிகை-உத்தரவாதம் வேறு கொடுத்திருக்கின்றீர்கள். சபாஷ்!

இந்த நாட்டு முஸ்லிம் சமூகத்தின் பெயரால் அரசியல் செய்கின்ற  முக்கிய கட்சிக்காரர்கள் நீங்கள்! உங்களிடம் உரிமையுடன் சில கேள்வியை சமூகத்தின் பேரால் நாங்களும் கேட்டால் தப்பிருக்காது என்ற எதிர்பார்ப்பு

1.புதிய உள்ளுராட்சி மன்ற எல்லைகள் நிர்னய விடயத்தில் உங்கள் கட்சி வடக்கு மற்றும் கிழக்கில் எத்தனை திருத்தங்களை முன்வைத்திருக்கின்றது.

2.வடக்கு மற்றும் கிழக்கிற்கு வெளியே சிதறி வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்தின் சார்பில் மு.கா. எத்தனை திருத்தங்கள் முன்வைத்திருக்கின்றது. அவை எவை எங்கு?

3.மு.கா. தலைவர் மர்ஹூம் அஷ்ரஃப் காலத்தில் கண்டி மாவட்டத்தில் தெல்தோட்டை பிரதேச செயலகம் என்று ஒன்று வென்றெடுக்கப்பட்டது. தற்போது பல வருடங்களாக  அது செயல்பட்டும் வருகின்றது. எல்லைகளும் தெளிவாக்கபட்டுள்ளது. அங்கு சிறுபான்மை சமூகங்களே பெரும்பான்மை. நாம் தேடிப் பார்த்ததில் குறைந்த பட்சம் சுலபமாக வென்றெடுக்கக் கூடிய அந்தக் கோரிக்கையாவது மு.கா முன்வைக்காதது ஏன்? புதிய எல்லை நிர்னய விடயத்தில் தற்போது தெல்தோட்டையில் நமது சமூகத்திற்கு  என்ன நடந்திருக்கின்றது என்று நீங்கள் தேடிப் பார்த்தால் அங்கும் ஒரு ஒப்பாறி சத்தம் உங்கள் காதுகளில்விழும்.

4.தேசிய மீலாத் விழா 2002ல் பாத்ததும்பறையில் உடத்தலவின்னை மற்றும் மடவளையை மையப்படுத்தி நடத்திய போது. மு.கா.தலைவர் ஹக்கீம் அன்றும் பிரதமராக இருந்த ரணில் (பிரதம அதிதி) முன்னிலையில் மடவளையை ஒரு நகரசபையாக பிரகடனம் செய்யுமாறு  விழா நாயகன் ரணிலிடம்  கேட்க, அந்த விழாவில்தான் கொழும்பு சென்றதும் முதல் வேலையாக மடவளையை ஒரு நகரசபையாக பிரகடனம் செய்கின்ற வேலையை பார்ப்பேன் என்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கரகோசத்துக்கு முன்னால் உறுதியளித்தார். எனவே இன்றும் ரணில்தானே பிரதமர் ஏன் இது பற்றியாவது நீங்கள் கோரிக்கை கொடுத்திருக்கின்றீர்களா? நிச்சயமாக அதுவும் இல்லை.

கைக்கு எட்டிய இந்தக் கனிகளே இப்படி கசிந்து போக சமூகம் எதை உங்களிடம் இருந்து இது விடயத்தில் எதை எதிர்பார்க்க முடியும். என்று நாம் கேட்டால் தப்பாக இருக்காதே!

துறைக்குப் பொறுப்பான அமைச்சர் நம்ம ஆள் என்று சமூகம் நினைத்துக் கொண்டிருக்கக்கூடும், ஆனால் சமூக விடயத்தில் மனிதன் சைபர் நிலை என்பது தெரிந்தவர்களுக்குத் தெரியும். 

எல்லைகள் இறுதி வடிவம் பெறும் போது  சமூகத்தின் ஒப்பாறியை  நாடு பூராவும் கேட்கவே அதிக வாய்ப்புக்கள் தெரிகின்றது.  

3 comments:

  1. Mawanella ya nahara sabai akkuren enru 2001 la aze thalaivar sonnar. Innum appidiye than. SLMC , ACMC, NC ellarukkum panam kuduthal katthuwaarhal

    ReplyDelete
  2. அது மட்டுமல்ல கல்முனையை தலையாய்
    காெ ண்டு கல்முனை மாவட்டமாக ஏற்படுத்தி தருவதாக சாெ ன்னார்கள் அதன் நடவடிக்கை என்ன! இதனால் தானே தலைவருக்கும் முன்னால் ஜனாதிபதிக்கும் பேச்சு வார்த்தை நடந்து முடியாமல் ரணிலுடன் கூட்டமைத்தது மக்கள் இன்னும் மறக்க வில்லை.

    ReplyDelete

Powered by Blogger.