யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு எதிராக, யாரும் இனவாதம் பேசவில்லை - மௌலவி பி.ஏ.எஸ் சுபியான்
-பாறுக் ஷிஹான்-
யாழ்ப்பாண பொதுமக்களுக்கு எதிராக யாரும் இனவாத் பேசவில்லை மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் யாழ் பிரதேச செயலாளருக்கு எதிராக அவர் பேசிய விதத்தினை சுட்டிக்காட்டியே அங்கிருந்தவர்கள் பேசினார்கள் என யாழ் மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கான இணைப்பாளர் மௌலவி பி.ஏ.எஸ் சுபியான் தெரிவித்தார்.
நேற்றைய தினம் (28) யாழ் மாவட்ட அபிவிருத்திக் கூட்டத்தில் இனவாதம் பேசப்பட்டதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் பல ஊடகங்களிற்கு செய்திகளை அனுப்பி இருந்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய மௌலவி பி.ஏ.எஸ் சுபியான் குறித்த கூட்டத்தில் நான் மக்களின் பிரதிநிதியாக கலந்த கொண்டிருந்தேன்.

தற்போது சில ஊடகங்களில் மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் தனக்கு எதிராககவும் முஸ்லீம் மக்களிற்கு எதிராகவும் முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரன். பாராளுன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன். மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோர் இனவாதம் மேற்கொண்டதாக என்.எம் அப்துல்லாஹ் என்கின்ற பெயரில் செய்திகளை அனுப்பி இருந்தார்.
ஆனால் நான் அங்கு பிரசன்னமாக இருந்த அதேவேளை இவ்வாறாக இனவாதம் ஒன்றும் அங்கு கதைக்க அவர்கள் முற்படவில்லை. மாறாக வட மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் யாழ் பிரதேச செயலாளருக்கு எதிராக அவர் பேசிய விதம் குறித்தும் சபையில் குறித்த மாகாண சபை உறுப்பினர் (அஸ்மீன்) பேச வேண்டிய ஒழுங்கையும், நாகரிகத்தையும் கடைப்பிடிக்கும் படியும் கேட்டுக் கொண்டனரே தவிர யாரும் அங்கு முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதம் பேசவில்லை. என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன்.
அத்துடன் மாகாண சபை உறுப்பினர் தற்போது அவர் மீது எழுந்துள்ள பல குற்றச்சாட்டுகளையும் ஊழல்களையும் மறைக்கும் பொருட்டு இவ்வாறான வேண்டத்காத செய்திகளை உண்மைக்கு புறம்பாக வெளிப்படுத்துகின்றார். என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன்.
We know about azmin. He is good man
ReplyDeleteTruth will triumph.Over to you Mr. Yasmin.It is now your turn.
ReplyDeleteWon't you check the news item with the people involved before you publish. Some thing smells fishy. A.A is not a fool to utter anything wrong in public
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteயாழ்ப்பாண முஸ்லிம்கள் சார்பில் சொல்லிக் கொள்வது. சுபியான் மவ்லவி, அஸ்மின் மவ்லவி ஆகியோர் சமூக நலனை கருத்தில் கொண்டு மேலும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
தமது சுயலாப அரசியலுக்காக இப்படி பகிரங்கமாக மோதிக் கொள்வது, யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்திற்கு அழகல்ல.
அஸ்மின் அவர்கள் தனது கருத்துக்களை நேரடியாக, தைரியமாக சொல்ல முன்வர வேண்டும், அப்துல்லாஹ், அப்துல் காதர், ரொஷான் போன்ற பெயர்களை பாவித்து தனது மரியாதையை தானே தொடர்ந்தும் சீரழித்துக் கொள்ளக் கூடாது.
அதே போன்று சுபியான் அவர்களும், பொறுப்புடன் அறிக்கைகளை வெளியிட வேண்டும்.
செய்திகளை வழங்கும் பொழுது, அதன் சாதக பாதகங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். தனிப்பட்ட தாக்குதல்கள யாழ் முஸ்லிம் சமூகத்தை மேலும் சீரழிக்கும், மேலும், சிஹான் என்பவரின் பல செய்திகள் யாழ் முஸ்லிம் சமூகத்திற்கு பாதகமான விளைவுகளியே ஏற்படுத்துகின்றன என்பதையும் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும். இவருக்கு செய்திகளை வழங்குவதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
ReplyDeleteயாழ் முஸ்லிம் இதனை கவனத்தில் கொள்வது நல்லது.
மௌலவி நல்லுறவோடு வாழவேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் இந்தக் கருத்தை முன்வைக்கிறார் பாராட்டுக்கள் நாங்களும் இதைத்தான் வரும்புகின்றோம் ஆனால் நான் இவ்வாறான கருத்திட்டம் ஒன்றை மதிப்பீடு செய்ய யாழ்ப்பாணத்தில் (யாழ் பிரதேச செயலாளர் அல்ல) உள்ள ஒர் பிரதேச செயலாளரிடம் கலந்துரையாடல் நடத்தியபோது பச்சையாக முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத்தைக் கக்கினார் அப்போது இவர்களும் மணிதர்கள்தானா என்று எண்ணத்தோன்றியது அவர்கள் கடித்தாலும் நாம் கடிக்கக் கூடாது ஆனால் கவனமாக இருக்கவேண்டும்
ReplyDelete