Header Ads



தயாசிறிக்கு, அர்ஜுனா அனுப்பியுள்ள கடிதம்

பல்வேறுப்பட்ட சவால்களிற்கு மத்தியில் நாங்கள் கட்டியெழுப்பிய நல்லாட்சியினை சீர்குலைக்க ஒருவருக்கும் சந்தர்பம் வழங்கக்கூடாதென முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவரும் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சருமாககிய அர்ஜீன ரணதுங்க அவர்கள் விளையாட்டு துறை அமைச்சர் தயாசிரி ஜயசேக்கர அவர்களிடம் கேட்டுக்கொண்டார். ' 2016 -2018 கிரிக்கெட் தேர்தல்களின் பொழுது விளையாட்டு அத்தியட்சகரின் முறையற்ற செயற்பாடுகள் மற்றும் சட்டவிரோத தேர்தல் தொடர்பாக ...' எனும் தலைப்பின் கீழ் விளையாட்டு துறை அமைச்சருக்கு பதில் கடிதமொன்றினை அனுப்பி  அமைச்சர் அர்ஜீன ரணதுங்க அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

  கிரிக்கெட் தேர்தலின் பொழுது விளையாட்டு அத்தியட்சகரின் செயற்பாடுகளிற்கு சவால் விடுக்கும் வகையில் முன்னெடுக்கப்படுகின்ற ஒவ்வொரு விசாரணைகளிலும் சாட்சி வழங்குவதற்கு தான் ஆயத்தமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். விளையாட்டு ஒழுங்குவிதிமுறைகள் 13, 14 ,15 ஆகிய பந்திகள் மற்றும் கிரிக்கெட் யாப்பின் 11(F) (V)  ஆகிய பந்திகளை அவமதித்து மற்றும் சட்டதிட்டங்களை தன்னுடைய சுய தேவையின் அடிப்படையில் பல்வேறுப்பட்ட முறையில் விமர்சித்து நடாத்திய கிரிக்கெட் தேர்தல்கள் தொடர்பாக விளையாட்டு அமைச்சர் அமைதி காப்பதினால் விளையாட்டு அத்தியட்சகர் தேவையற்ற முறையில் வர்ணித்து அவரை பாதுகாப்பதற்கு விளையாட்டுதுறை அமைச்சர் முயற்சிப்பது வருந்ததக்கச் செயலென அமைச்சர் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

' விளையாட்டு அத்தியட்சகரின் முறையற்ற செயற்பாடுகள் காரணமாக கிரிக்கெட் தேர்தல்களில் மாத்திரம் குழப்பநிலை தோன்றவில்லை மாறாக பூப்பந்து ,ஹொக்கி, வொலிபோல் ,ரக்பி  ,சைக்கிள் மற்றும் உடற் தகுதிகாhன் போன்ற தேர்தல்களிலும் பல குழப்ப நிலமைகள் தோன்றியுள்ளன. நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இவ்வாறாதோர் நிலையினை நாங்கள் ஒரு போதும் எதிர்பார்க்கவில்லை.ஊழல் மோசடிக்காரர்களை பாதுகாப்பதற்கு ஒரு போதும் முயற்சிக்க வேண்டாமென நான் உங்களிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன். தேர்தல்களை நடாத்தும் பொழுது விளையாட்டு அத்தியட்சகரிற்கெதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுமாயின் சுயாதீனமான குழுவொன்றினை நியமித்து முறையான விசாரணையொன்றினை முன்னெடுப்பது துறைச்சார் அமைச்சராகிய உங்களது கடமையாகும். தாங்கள் ஊழல் மோசடிக்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணுகின்றமையினாலா இவ்விடயம் தொடர்பில் இன்னமும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை?

தற்போதைய ஜனாதிபதி – பிரதமர் தலைமையினால நல்லாட்சி கூட்டு அரசாங்கத்தை மலர் மெத்தையின் மீதிருந்தவாறு உருவாக்கவில்லை மாறாக பல்வேறுப்பட்டு சவால்களிற்கு முகங்கொடுத்து ஏன் உயிர் தியாகங்களைச் செய்தே இவ்வெற்றியை ஈட்டிக்கொண்டோம். அன்று நாங்கள் முன்னெடுத்த மக்கள் போராட்டத்திற்கெதிராக வேலைச் செய்த  ஜனாதிபதி- பிரதமரின் செயற்பாடுகள் பொருட்டு சிரித்த ஒரு சிலர் இன்று எங்கள் அரசாங்கத்தில் அமைச்சர் பதவியையும் மற்றும் உயரிய பதவிகளையும் பெற்றுக்கொண்டு நல்லாட்சியை சீர்குலைக்கும் செயற்பாடுகளில் ஈடுப்பட்டுள்ளார்கள். தாங்கள் இவ்வாறானதோhர் நிலைக்குச் செல்லாதிருக்குமாறு என்னுடன் நெருங்கி வேலைச்செய்யும் சகேதர அமைச்சராகிய உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். திலங்க சுமத்திபால அவர்களின் அரசியல் வரலாறு தொடர்பாக மாத்திரம் விசாரித்து விசாரணையினை நிறைவுச் செய்யாது அவருடைய அரசயல் வரலாற்றினை மேலும் விசாரணைச் செய்து மனசாட்சிக்கு இணங்க செயற்படுமாறு நான் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.

விளையாட்டு துறை அமைச்சரே  விளையாட்டு ஒழுங்குவிதிகள் 15-2ம் பந்தியிற்கமைய எந்தவொரு தேர்தல்கள் மூலமாக தேசிய விளையாட்டு சங்கத்தின் பதவியின் பொருட்டு நியமிக்கப்பட்ட பின்னர் தகுதியற்ற நபரென கருதப்படுமாயின் அவரை அப்பதவியிலிருந்து நீக்கும் பொறுப்பு விளையாட்டு துறை அமைச்சரை சாரும். இச்செயன் முறையினை அடிப்படையாகக் கொண்டு கிரிக்கெட் தேர்தலில் தேவ்வுச்செய்யப்பட்டுள்ளவர்களின் தகுதி நிலை தொடர்பாக ஆராய்யுமாறு நான் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். அத்துடன் கிரிக்கெட் தேர்தல்களின் பொழுது விiளாட்டு அத்தியட்சகரின் செயற்பாடுகள் தொடர்பாக முறையாக விசாரணையொன்றினை முன்னெடுக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். 

அவ்விசாரணையின் பொழுது சாட்சி வழங்குவதற்கு நான் தயாராகவே உள்ளேன். அவ்விசாரணைகளின் பொழுது விளையாட்டு அத்தியாட்சகரின் செயற்பாடுகள் தவறென உறுதிப்படுத்தப்படுமாயின் அவற்றிற்கெதிராக சட்டதிட்டங்களிற்கு அமைவாக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்குமாறும் தகுதியற்ற நபர்களை பணிநீக்கம் செய்யுமாறும் அநீதியிழைக்கப்பட்ட நபர்களிற்கு சாதரணத்தை நிலைநாட்டுமாறும் நான் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். நல்லாட்சியை சீர்;குலைக்கின்ற இச்சம்பவம் தொடர்பாக அதிமேதகு ஜனாதிபதி மற்றும் பிரதமரை அறிவூட்டுவது என்னுடைய கடைமை என்பதனையும் இறுதியாக நான் உங்களிடம் கூறவிரும்புகின்றேன்....' என அக்கடிதத்தில் அமைச்சர் அர்ஜீன ரணதுங்க அவர்கள் விளையாட் துறை அமைச்சரிடம் குறிப்பிட்டுள்ளார்.  அமைச்சர் அர்ஜீன ரணதுங்க அவர்கள் விளையாட்டு துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.