ரணில் + மஹிந்த அரசியல் மோதலை முடிக்க வேண்டும் - ஜானீஸ்ஸர தேரர்
-vi-
நாட்டின் நன்மை கருதி பிரமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தமக்கிடையிலான அரசியல் மோதலை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என கொழும்பு - ஹுணுபிடிய கங்காராம விகாரையின் தலைவர், கலபோட ஜானீஸ்ஸர தேரர் இருவருக்கும் அறிவுரை கூறினார். இதன்போது மேடையில் இருந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபகஷ ஆகியோர் புன்னகைத்தவாறு ஒருவருக்கொருவர் கதைத்து கொண்டிருந்தனர்.
கொழும்பு - ஹுணுபிடிய கங்காராம விகாரையின் வருடாந்த நவம் பெரஹெரா நேற்று மற்றும் நேற்று முன்தினமும் சிறப்பாக நடைபெற்றது.
நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் விகாரைக்கு வருகைதந்து, சமய சடங்குகளில் ஈடுப்பட்டனர்.
இதன்போது, ஹுணுபிடிய கங்காராம விகாரையின் தலைவர் கலபோட ஜானீஸ்ஸர தேரர் பிரதர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு அறிவுரை கூறும் வகையில் உரையொன்றை நிகழ்த்தியிருந்தார்.
'பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னெடுக்கும் செயற்பாடுகள் ஒவ்வொன்றும் சரியாக உள்ளது. எனினும் பத்திரிகையாளர்களையும் மக்கள் பிரதிநிதிகளையும் அச்சுறுத்துவதாக அவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன என தேரர் தெரிவித்தார்.
இதன்போது பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அருகில் அமர்ந்திருந்த மஹிந்த ராஜக்ஷவை நோக்கி கைவிரலை காட்டி சிரித்துகொண்டு ஏதோ கூறினார். அதற்கு மஹிந்த ராஜபக்ஷவும் சிரித்துகொண்டு ஏதா பதில் ஒன்றை கூறினார்.
பின்னர் தொடர்ந்து உரையாற்றிய கலபோட ஜானீஸ்ஸர தேரர்,
வெகுஜன ஊடகங்களின் மீது ரணில் விக்கிரமசிங்கவின் ஆக்கிரமிப்பு காணப்படுவதாக இந்நாட்களில் குற்றம் சுமத்தப்படுகின்றது. அவ்வாறு ஆக்கிரமிப்பு இருக்கவேண்டும். நாட்டை ஆள்பவர்களுக்கு அந்த உரிமை இருக்கின்றது.
எனினும் பிரதமர் நிதானத்தை இழந்து விட கூடாது. சரியான நேரத்தில் தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும்.
இதேவேளை பிக்குகளுக்கு எதிராக சில நேரம் செயற்படுவதும் உண்டு. ஆனால் அவற்றை நாம் கண்டுகொள்வதில்லை.
Post a Comment