Header Ads



தென்கிழக்கு பல்கலைககழக பட்டமளிப்பு விழாவை, வளாகத்திலேயே நடத்த வேண்டுகோள்


-ஏ.பி.எம்.அஸ்ஹர்-

தென் கிழக்கு பல்கலைககழகத்தின் பட்டமளிப்பு விழாவை பல்கலைக்கழக வளாகத்திலேயே நடத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

எதிர் வரும் மார்ச் மாதம் கொழும்பில் நடாத்த் தீர்மானிக்கப்பட்டுள்ள தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவினால் பட்டம் பெறும் பட்டதாரிகள் மட்டுமல்லாது அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களும் மிகுந்த சிரமங்களை எதிர் நோக்க வேண்டியுள்ளதாகவும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 700கும் மேற்பட்ட்டோர் இதில் தமது பட்டகளைைப் பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் கொழும்பு சென்று தமது பட்டங்களைப்பெறுவதற்ககாக் பெர்ருந்தொகைப்பணத்தினை செல்வு செய்ய வேண்டியுள்ளதாகவும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது..இதே வேளை பல்கலைக்கழகத்தில் தேவையான போதுமான் வசதிகள் தற்போது உள்ள் நிலையில் இந்நிகழ்வினை கொழும்பில் நடத்து வதற்கான எந்தவிதமான் நியாயமான காரணங்களும் இல்லை எனவும் சம்மந்தப்பட்டோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிகழ்வினை கொழும்பில் நடத்துவத்ற்காக பல்கலைக்கழ்கத்தினால் 6.4 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக  அறிய முடிகின்றது.அத்துடன் ப்ட்டம் பெறுவோர் தமது குடும்பத்ததுடன் கொழும்பு வந்து செல்ல சுமார் 5 மில்லியன் ரூபாவும் செல்வாகும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

நல்லாட்சியில் இவ்வாறான் வீண் விரயங்களை தவிர்த்து எதிர் வரும் காலங்களில் பட்டமளிப்பு வைபவங்களை தென் கிழக்கு பல்கலைக்கழக வளாகத்திளேயே நடாத்துவதன்  மூலம் ஏழை எளிய மாண்வர்களுக்கு ஏற்படவுள்ள அசொள்கரியங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வோண்டும்  எனவும் வேணடுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

1 comment:

Powered by Blogger.