"முஸ்லிம் கூட்டமைப்பு" - முஜீபுர் ரஹ்மானும் பூரண ஆதரவு
(ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்)
உத்தேசிக்கப்பட்டுள்ள முஸ்லிம் கூட்டமைப்புக்கு பூரண அதரவை வழங்க தயாராகவிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் கூறினார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கை முஸ்லிம்களின் நலன்கருதி ஸ்தாபிக்கப்படவுள்ள முஸ்லிம் கூட்டமைப்புக்கு எனது பூரண ஆதரவை வழங்க இணங்குகிறேன். இவ்வாறான பலம் வாய்ந்த அமைப்பொன்றின் மூலமே இலங்கையில் வாழும் முஸ்லிம்களின் உரிமைகளை உறுதிப்படுத்தமுடியும்.
அத்துடன் முஸ்லிம் சார்பு விவகாரங்களில் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலம் முஸ்லிம் நலன்களை பாதுகாக்கவும் முடியும்.
எனவே முஸ்லிம் கூட்டமைப்பு விவகாரத்தில் என்னால் முடிந்த பங்களிப்பை வழங்கவும், இணைந்து செயற்படவும் தயாராகவுள்ளேன் என்றார்.
Post a Comment