Header Ads



யாழ் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்களுக்கு, நீதியை பெற்றுக்கொடுப்பேன் அமைச்சர் ஹலீம்

-AA. MOHAMED ANZIR-

யாழ் பல்கலைக்கழகத்தினால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் பெண்கள் சேலை அணிந்து விரிவுரைகளில் பங்கேற்க வேண்டும், தாடியுடன் விரிவுரைக்கு சமூகமளிக்க கூடாது. என புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பில் உயர் கல்வியமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவுடன் பேசப்படும் என முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஹலீம் தெரிவித்தார்.

இந்த தகவல் முன்னமே எமக்கு கிடைத்திருப்பின் அமைச்சரவையில் பேசியிருப்போம். எனினும் இதுதொடர்பில் உயர் கல்வியமைச்சருடன் பேசுவேன்.

மாணவர்கள் தமது சமய, கலாசார, பண்பாடுகளை பின்பற்ற உரிமையுண்டு. அந்தவகையில் யாழ் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் மாணவியர் பர்தா அணியவும், தாடி வளர்க்கவும் உரிமையுள்ளவர்கள். இதுவிடயத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது ஏற்புடையதல்ல.

எனவே சம்பந்தப்பட்ட அமைச்சருடன் பேசுவோம். முஸ்லிம் மாணவர்களுக்கு, முஸ்லிம் சமய விவகார அமைச்சு நீதியை பெற்றுக்கொடுக்கும் என்றார்

1 comment:

  1. கடந்த ஆட்சியில் சிங்கள இனவாதம்..
    நல்லாட்சியில் தமிழ் இனவாதமா ???
    இலங்கையில் பிறந்த சகல மதத்தவர்களுக்கும் அவரவர் மத சார்பான விழுமியங்களைப் பின்பற்ற சமமான உரிமை உண்டு... இதில் ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தினை அடக்கியாள நினைப்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.. இது மீண்டும் ஒரு இனப்பிரச்சினைக்கு வழி வகுக்கும்..

    சம்பந்தப்பட்டவர்கள் இந்த பிரச்சினையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும்..

    ReplyDelete

Powered by Blogger.