Header Ads



நற்பிட்டிமுனை வரலாற்றில் முதல் தடைவையாக மதீனா பல்கலைக்கழகத்துக்கு தெரிவு

-அஷ்ஷெய்க் ஏ.ஏ.எம்.பர்ஸாத் (ஹாமி) கட்டாரிலிருந்து-

1990-09-04 ம் திகதி நற்பிட்டிமுனையில் ஜயூப் கதீஜா உம்மா தம்பதிகளுக்கு மகனாக பிறந்த இவர்,தனது ஆரம்பக் கல்வியை தனது கிராமத்திலுள்ள கமு லாபிர் வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை கல்முனை அல்-ஹாமியா அரபுக்கல்லூரியிலும்கற்று அங்கு அரபு,இஸ்லாமிய கற்கைகளில் தலை சிறந்து விளங்கியதுடன் அல்-ஆலீம் ஆரம்ப,இறுதி பரீட்சைகளிலும் தோற்றி,க.பொ.த.சா மற்றும் க.பொ.த.உ ஆகியவைகளிலும் திறைமைச் சித்திகளைப் பெற்று 2010ம் ஆண்டு மௌலவிப் பட்டம் பெற்றார்.

மோலும் நற்பிட்டிமுனை தார் இப்னு மஸ்ஊத் அஹதிய்யா பாடசாலையில் ஆசிரியராகவும் ,மஸ்ஜிதுர் றாஜிஹி பள்ளிவாசலிலும் இமாமாகவும் கடைமையாற்றினார். இவர் கத்தான்குடியில் அமைந்துள்ள பல்கலைக்கழக கல்லூரியில் Quantity Surveyor கற்கையையும் பூர்த்தி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாற்போது மதீனாவில் அமைந்துள்ள சர்வதேச இஸ்லாமிய பல்கலைக் கழகத்துக்கும் தெரிவாகியுள்ளார்.அல்ஹம்துலில்லாஹ்,இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 2016-02-15 ம் திகதி மதீனா நோக்கி பயணிக்கவுள்ளார்.யாஅல்லாஹ் இவரின் பயணத்தையும்,கல்விப் பயணத்தையும் சிறப்பாக்கி வைப்பதற்கு நாம் பிரார்த்திப்பதுடன் நற்பிட்டிமுனை மக்கள் சார்பாக எமது வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றோம்.

4 comments:

Powered by Blogger.