முஸ்லிம்களின் அபிஷாசைகள், ஜிஹாதியமாக பேசப்படுகின்றது - பசீர் சேகுதாவூத்
முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுத் திட்டம் அவசியம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் அரசியல் தலைவர்கள் நிரந்தமானதும், நீடித்திருக்கக் கூடிய வகையிலும் தீர்வுத் திட்டத்தை முன்வைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.முஸ்லிம் சமூகம் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல்வாதிகளின் நலன்களைவிடவும் முஸ்லிம் மக்களின் நலன்களை உறுதி செய்ய வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
தனியான முஸ்லிம் மாகாண அலகு ஒன்று அவசியம் என அண்மையில் தாம் காத்தான்குடியில் கூறியது ஊடகங்களில் பிழையாக மொழிபெயர்க்கப்பட்டு சர்ச்சை கிளப்பப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் மக்களின் அபிலாஸைகள் பற்றி பேசப்படும் போது அது ஜிஹாதியமாக பேசப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
அபிலாசைகள் ....ஜிஹாதியம். புரியவில்லை சார். யார் பேசுகிறார்கள்..? முஸ்லிம்களா? வேற்று மதத்தவர்களா? ஜிஹாதியத்துக்கான உங்கள் அகராதியில் என்ன விளக்கம் என்பதை கூறினால் நன்றாக இருக்கும்.
ReplyDeleteராஜபக்ச ஆட்சியில் மிகவும் நன்றாக உபசரிக்கப்பட்ட முஸ்லிம்கள், தற்போது ஒடுக்கு முறைக்கு உள்ளாகப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்பதான் புரிகிறது நீங்கள் ராஜபக்ச பக்சவுக்கு ஆதரவளித்ததிட்கான காரணம்.
அப்போ தற்போதைக்கு அரசியல் வாதிகளின் நலந்தான் கவனிக்கப்படுகிறது என்று சொல்லுகிறீர்கள். இது ஒரு ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே பார்க்கிறோம்.