Header Ads



ஊடகங்களை அச்சுறுத்திய ரணிலுக்கு, அநுரகுமாரவின் பதிலடி

ஊடக நிறுவனங்கள் பொதுமக்களுக்காக இயங்காதபோது வழமையான சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இதனைவிடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஊடகங்களை எச்சரித்துள்ளமையை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று ஜேவிபி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (19) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மேற்படி இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

தெரன மற்றும் டெய்லி மிரர் ஆகியவை மீது விடுத்த எச்சரிக்கையை ரணில் விக்கிரமசிங்க திரும்பப்பெற்றுக்கொள்ளவேண்டும்.

ஊடகங்கள் மீது ரணில் விக்ரமசிங்கவுக்கு எச்சரிக்கை விடுப்பதற்கு உரிமையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக நிறுவனங்கள் அரச சொத்துக்களாகவே கருதப்படுகின்றன. இதனைவிடுத்து ரணில் கொள்ளுப்பிட்டியில் தமது சொத்தை ஊடகங்களுக்கு வழங்கவில்லை என்றும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.