Header Ads



யாழ்ப்பாணம் முஹம்மதியா ஜும்மா பள்ளிவாசலுக்கு, ஆளுநர் பலிஹக்கார விஜயம்

-பாறுக் ஷிஹான்-

வடக்கு ஆளுநர் எச்.எம்.ஜீ.எஸ்.பலிஹக்கார யாழ் முஹம்மதியா ஜும்மா பள்ளிவாசலுக்கு திடிர் விஜயம் ஒன்றினை இன்று மாலை 4.30 மணிக்கு மேற்கொண்டார்.

இவரை அப்பள்ளிவாசல் பேஷ் இமாம் மஹ்மூத் பலாஹி வரவேற்றதுடன் ஆளுநர் பள்ளிவாசலில் இருந்த மக்களுடன் கலந்தரையாடினார்.

அத்துடன் முஸ்லீம் மக்களின் பிரச்சினை .மீள்குடியேற்றம் குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சர்கள்,அதிகாரிகளின் கவனத்திற்கு தான் கொண்டு சென்றதாக அங்கு குறிப்பிட்டார்.

இதன் போது மௌலவி யாழ் முஸ்லீம்களின் பிரச்சினைகள் குறித்து துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்தார்.


No comments

Powered by Blogger.