யார் இதற்கு முன்வருவார்கள்..?
இம்முறை அரச நிர்வாக சேவைக்காக 2015/2016 பொது நிர்வாக அமைச்சின் கீழ் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக திறந்த மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்காக அரசாங்க சேவை ஆணைக்குழு விண்ணப்பங்களை கடந்த 22ம் திகதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிட்டிருந்தது.
எனினும் இம்முறை திறந்த போட்டிப் பரீட்சைக்காக 28 வயதுக்கு கீழ்பட்டவராக இருக்க வேண்டும் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. உண்மையில் இது மாணவர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றமாக உள்ளது. ஏனெனில் முன்பொரு காலத்தில் திறந்த போட்டிப் பரீட்சைக்கு எத்தனை தடவையும் தோற்ற முடியுமாக இருந்தது. ஆனால் வயதெல்லை 30 ஆக இருந்தது. ஆனால் இந்நிலை இப்போது இல்லை அதாவது திறந்த போட்டிப்பரீட்சை எழுதுவதற்கு ஒரு மாணவனுக்கு இரு தடைவ மாத்திரமே அனுமதி வழங்கப்படுகின்றது.
அவ்வாறிருக்கையில் 28 வயதுக்கு கீழ்பட்டவராக இருக்க வேண்டும் என்பது நியாயமற்ற ஒன்றாக உள்ளது. கடந்த முறை நிர்வாக சேவை போட்டிப் பரீட்சைக்காக 2014ஃ2015 ஆகக்கூடிய வயதெல்லை 29 என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. அதனால் மாணவர்கள் ஓரளவு நன்மையடைந்தார்கள். அதே போல இம்முறையும் இவ் வயதெல்லையை 29ஃ30 ஆக அதிகரித்தால் நிறைய மாணவர்களினால் இதன் பலாபலனை பெறக்கூடியதாக இருக்கும்.
இம்முறை கல்வி நிர்வாக சேவைக்காக திறந்த Nhபட்டிப் பரீட்சைக்கு 30 வயதெல்லை தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கும் இருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும் மேலும் வடகிழக்கு மாகாணத்துக்கான விசேட நிர்வாக சேவைப் போட்டிப்பரீட்சைக்கு வயதெல்லை 28 என வெளியிடப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பு த.தே.கூ இன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்செல்வராசா நேரடியாக தலையிட்டு இவ் வயதெல்லையை 30 ஆக உயர்த்தி மாணவர்களின் எதிர்காலக் கனவுக்கு வித்திட்டார்.
எனவே இம்முறை வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள 28 வயதெல்லையை 29 ஆக அதிகரித்துத் தருவதற்கு எம்மவர்கள் மத்தியில் யார் இதற்கு முன்வருவார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
தயவு செய்து இச் செய்தியினை உங்கள் இணையத்தளத்தில் பிரசுரிக்குமாறு கருணையோடு வேண்டிக் கொள்கின்றேன்.
மாணவர்களின் எதிர்காலத்திற்காக
ஏ.ஜே.எம்.நவாஸ்
அம்பாரை மாவட்டம்
கிழக்கு மாகாணம்
சம்மாந்துறை.
Is there any daredevilry politican?
ReplyDelete