Header Ads



கொழும்பிலுள்ள முஸ்லிம் பாடசாலை குறித்து, ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி..!

கொழும்பில் உள்ள முன்னணி தனியார் பெண்கள் முஸ்லிம் சர்வதேச பாடசாலை ஒன்று அங்கு கல்வி கற்றும் வரும் பிள்ளைகளுக்கு அடிப்படைவாதத்தை போதித்து வருவதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பின் மைய பகுதியில் அமைந்துள்ள இந்த பாடசாலை முஸ்லிம் மாணவிகளுக்கு பல தசப்தங்களாக இஸ்லாமிய கல்வியை வழங்கி வருகிறது.

இலங்கையின் சம்பிரதாயங்களை கொண்ட மற்றும் தென் கிழக்காசிய முஸ்லிம்களை அடிப்படையாக கொண்டு நாடு முழுவதிலும் உள்ள முஸ்லிம் பாடசாலைகளில் சலபிஷம் மற்றும் வகாபிஷம் கற்பிக்கப்படுவது கடந்த ஒரு தசாப்தமாக அதிகரித்துள்ளதாக பெற்றோர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இலங்கையில் 90 ஆம் ஆண்டுகளில் இருந்து முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகள் படிப்படியாக அதிகரித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் கடந்த 7 ஆண்டுகளில் இந்த நிலைமை வேகமாக அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியின் கூற்றுப்படி கறுப்பு முகமூடி அல்லது புர்க்கா என்பன தீவிரவாதத்தின் அடையாளங்களாக பார்க்கப்படுகிறது.

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இணைந்து போரிடுவதற்காக இலங்கையில் இருந்து 36 முஸ்லிம்கள் சென்றுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் இந்த வருட ஆரம்பத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருந்தார்.

இலங்கையில் முஸ்லிம்கள் அமைதியாகவும் சுதந்திரமாகவும் தேசிய கலாச்சாரத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் உலக பயங்கரவாததுடன் தொடர்புகளை கொண்டிருப்பதாக இதுவரை குற்றம் சுமத்தப்படவில்லை ஒரு இஸ்லாமியர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள முஸ்லிம்களில் பெரும்பாலானோர் சவூதி அரேபியாவின் அடிப்படைவாத கொள்கைகளை நிராகரிக்கின்றனர்.

முகத்தை மூடுவதையும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இணைந்து போரிட சென்றவர்களையும் இலங்கையில் உள்ள பெரும்பாலான முஸ்லிம்கள் முற்றாக நிராகரித்துள்ளதாக அந்த ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

2 comments:

  1. அகில இலங்கை ஜம்இய்யதுள் உலமா இலங்கையில் உள்ள இஸ்லாமியக் கல்வி நிலையங்களையும் மதரசாக்களையும் ஒரே பாடத்திட்டத்தின் கீழ் நிருவகிக்க தொடர்ந்தும் தவரிவருகிறது. நவீன நடைமுறைக்கு ஒவ்வாத குருட்டுக் கொள்கைகளைப் பின்பற்றக்கூடிய காதியானிகள்,அவ்லியாக்கள், அலவிய்யாக்கள்,தரீக்காக்கள்,ஷீயாக்கள், கபுறு வணங்கிகிகள் எல்லோரையும் பற்றிய விளிப்புணர்வு ஏற்படுத்தப் படவேண்டும்.இஸ்லாத்தினை விட்டும் வரம்பு மீறிய கொள்கைகளைப் போதிக்கக் கூடிய மத்ரசாகளையும் அதற்காக உதவிபுரிபவர்களையும் வேளிச்சத்திட்கு கொண்டு வரவேண்டும்.
    இல்லாவிட்டால் தொடரந்ததும் இனவாதிகள் இஸ்லாமியப் பாடசாலைகளில் கைவைப்பது தவிர்க்க முடியாமல் போகலாம்.
    அகில இலங்கை ஜம்யிய்யதுள் உலமாவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நேரான கொள்கைகளைப் பின்பற்றக்கூடிய எத்தனையோ மத்ரசாக்களும் இருக்கத்தான் செய்கின்றன.என்றாலும் தவறான கொள்கைகைகளைப் பின்பற்றக்கூடிய மதரசாக்களை இனங்கண்டு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் எதிர்காலத்தில் சகல அரபு மத்ரசாகளையும் பாதிக்கலாம்.அரபு நாடுகளிலிருந்து கிடைக்கும் உதவியையும் ஏதாவது சட்டமமொன்றைக் கொண்டு வந்து முடக்கப் பார்ப்பார்கள் இனவாதிகள்.

    ReplyDelete
  2. Nowadays many Muslims from SL get education in Saudi Madhrasas and learn the True Islamic knowledge. People always blame this as Salafism and Wahhabism. Practice of Fardhah is considered as Fundamentalism. These all are out of fear and jealousy. We don't need to worry about it.

    ReplyDelete

Powered by Blogger.