Header Ads



ஐரோப்பிய நாடுகளுக்கான, தப்லீக் அமீர் "ஹாபிஸ் பட்டேல் ஸாஹிப்" வபாத்

அனைத்து ஐரோப்பிய நாடுகளுக்குமான தப்லீக் அமைப்பின் தலைமை அமீர்  " ஹாபிஸ் பட்டேல் ஸாஹிப் " ரஹிமஹுள்ளாஹ் ( HAFIZ PATEL SAAHIB - Rahimahullaah )  அவர்கள் இங்கிலாந்தின் டியூஸ்பெரி ( Dewsbury ) நகரில் நேற்று  வியாழன் ( 18/02/2016 ) மாலை 07.30 மணியலவில் வபாத்தானார்கள்.

انا لله وانا اليه راجعون

மர்ஹூம் ஹாபிஸ் பட்டேல் ஸாஹிப் ( ரஹிமஹுள்ளாஹ் ) அவர்கள் 1950 களில் இருந்து இன்றுவரை முழு ஐரோப்பாவுக்குமான புனித தஹ்வத் தப்லீக் அமைப்பின் அமீராக இருந்து வந்ததுடன் ஹாபிளுல் குர்ஆனாகவும்  ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் முக்கிய அரபுக் கலாசாலைகள் பலவற்றின் தலைவராகவும் மேற்பார்வையாளராகவும் செயற்பட்டு வந்துள்ளார்கள்.

1950 களின் நடுப் பகுதி அளவில் மர்ஹூம் ஹாபிஸ் பட்டேல் சாஹிப் ( ரஹீமஹுள்லாஹ் ) அவர்கள் ஹஜ்ஜுக்காக மக்கா சென்றிருந்த வேலை தஹ்வத் தப்லீக் உழைப்பின் உலக அமீர் சங்கைக்குரிய  மர்ஹூம் மௌலான யூசுப் அல் காந்தஹ்லவி ( ரஹீமஹுள்லாஹ் ) அவர்களுடன் மிக நெருங்கிய உறவை ஏற்படுத்திக் கொண்டார்கள். குறித்த ஹஜ்ஜை நிறைவு செய்து விட்டு இங்கிலாந்தை நோக்கி திரும்புகையில் மௌலான யூசுப் அல் காந்தஹ்லவி ( ரஹீமஹுள்லாஹ் ) அவர்கள் மர்ஹூம் ஹாபிஸ் பட்டேல் சாஹிப் ( ரஹீமஹுள்லாஹ் ) அவர்களிடம் ஒரு முக்கிய வேண்டுகோளை முன் வைத்தார்கள்.

" உலகின் நாலா பகுதிகளையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கும் மேற்கத்தியர்கள் மக்கா மதீனா உள்ளிட்ட முக்கிய அரேபிய நகரங்களை கலாச்சார சீரழிவுகளை உண்டுபண்ணி லண்டன், பெரிஸ் நகரங்களை போன்று மாற்றியமைக்க முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள். நீ ஐரோப்பாவில் கடுமையாக தஹ்வாவுடை முயற்சிகளை மேற்கொண்டு லண்டன், பெரிஸ் போன்ற நகரங்களை மக்கா, மதீனா நகர்களை போன்று மாற்றியமைக்க கடுமையாக உழைக்க வேண்டும் " என்பதே குறித்த வேண்டுகோளாகும். 

அன்று இங்கிலாந்தில் மர்ஹூம் ஹாபிஸ் பட்டேல் சாஹிப் ( ரஹீமஹுள்லாஹ் ) அவர்கள் ஆரபித்த அவர்களது தஹ்வாவுடைய முயற்சி, நேற்றைய  தினம் அவர்களுக்கு மௌத்து சம்பவிக்கும் வரை கிட்டத்தட்ட ஆறு தசாப்த காலம் ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் எங்கும் வியாபித்துச் சென்றது. இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் எங்கும் இன்று பாரிய இஸ்லாமிய மறுமலர்ச்சி ஏற்பட்டிருப்பதில் தஹ்வத் தப்லீக் உழைப்பின் வகிபாகமும் மிகவும் முக்கியமானது என்பதுடன் அதற்கு காரணமாக இருந்த இலட்சக் கணக்கான தஹ்வத் தப்லீக் உழைப்பின் தாயிகளின் உருவாக்கத்தில் மர்ஹூம் ஹாபிஸ் பட்டேல் சாஹிப் ( ரஹீமஹுள்லாஹ் ) அவர்கள் மிக முக்கிய பங்காற்றியிருந்தார்கள். 

தஹ்வாவுடைய களத்தில் மிக நீண்ட காலம் போராடிய ஒரு தியாகியின் குரல் நேற்றுடன்  மௌனித்து போனது. அவர்களது மறைவு முழு ஐரோப்பிய அமெரிக்க முஸ்லிம்களுக்கும் பெரும் பேரிழப்பாகும்.

இன்ஷா அள்ளாஹ் இன்று  வெள்ளிக் கிழமை (19/02/2016 ) அஸர் தொழுகையை தொடர்ந்து டியுஸ்பெரி நகரில் அமைந்துள்ள இங்கிலாந்தின் தப்லீக் உழைப்புக்கான தலைமை மர்கஸ்சிற்கு சமீபமாகவுள்ள மையவாடியில் அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் செய்யப் படவுள்ளது.

ஒரு சிறந்த தாஈயிற்கு வாக்களிக்கப் பட்டுள்ள அனைத்து நற்பாக்கியங்களையும் அள்ளாஹ் அவர்களுக்கு வழங்குவானாக.


தகவல் : அஷ் ஷெய்க், அல் ஹாபிள் ஷபீக் பின் சுபைர்.

2 comments:

Powered by Blogger.