றெஜினோல்ட் குரே நியமனம், நம்பிக்கையூட்டும் செயற்பாடு - றயீஸ்
-பாறுக் ஷிஹான்-
வடக்கு மாகாண ஆளுனராக றெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டமை வடமாகாண தமிழ்பேசும் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் செயற்பாடாகும் என வடமாகாண சபை உறுப்பினரும் முஸ்லீம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினருமான .எச்.எம். றயீஸ் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண ஆளுநராக றெஜினோல்ட் குரே நல்லாட்சி அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டமையானது வடக்கு வாழ் தமிழ்மக்கள் மற்றும் முஸ்லீம் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் செயற்பாடாகும்.
சரியான மாலுமியின்றி இரண்டு வருடங்களாகத் தள்ளாடும் கப்பலைப்போல வடமாகாண சபை தத்தளித்து சென்று கொண்டிருக்கையில் இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தினால் நியமிக்கபட்ட ஆளுநர் நியமனத்துடன் சீராக நேராக தள்ளாட்டமின்றி தனது இலக்கையடையும் என்ற நம்பிக்கையை வடமாகாணத்தின் புதிய ஆளுனராக கௌரவ பேராசிரியர் றெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டமை மூலம்ஜனாதிபதி அவர்கள் வடக்கு வாழ் தமிழ் மற்றும் முஸ்லீம் சமூகத்தினருக்கு நம்பிக்கையை தந்துள்ளார் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினரும் சிறீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினருமான எச்.எம் றயீஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில் இவர் ஒரு சிறந்த கல்விமான் அதிலும் ஒரு சிறந்த பேராசிரியருமாவார். இவர் மாகாண சபை அங்கத்தவர். முதலமைச்சர் தொடக்கம் அமைச்சர் என பல்வேறு பரிமாணங்கள் எடுத்து அரசியலில் பாண்டித்துவம் பெற்றவர். மேலும் இவரது அரசியல் பயணத்தின்போது இனவாதம் மற்றும் மதவாதம் பற்றி பேசியது கிடையாது. இவர் தமிழ் பேசும் மக்களுக்கு ஆதரவாக இன்று வரை தொடர்ந்து குரல் கொடுத்து வருவதன் காரணமாக பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டதோடு கொள்கை மாறாது அனைத்து இன்னல்களையும் வென்றே இப் பதவிக்கு வந்துள்ளார். நாட்டில் தற்போது நல்லெண்ண முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் இவரது நியமனமானது வடக்கு தமிழ் முஸ்லீம் மக்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷமாகவே பார்க்கவேண்டி உள்ளது.
மாகாண சபை மூலம் சிறுபான்மையினருக்கு மனம் நிறைந்த பலா பலன்களை வழங்குவார் என்றும் தமிழ் பேசும் மக்களுக்கு மாகாண சபையின்; மூலம் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பாக எப்போதும் குரல் கொடுக்கக் கூடியவர் எனவும் தெரிவித்துள்ளார்;.
Post a Comment