கம்மல்துறை ஆற்றுமுகத்தில், மூழ்கி முபீன் அஹ்மத் மரணம்
-எம்.இஸட்.ஷாஜஹான்-
நண்பர்களுடன் கம்மல்துறை ஆற்றுமுகத்தில் (கடலும் மாஓயா ஆறும் ஒன்று சேரும் இடம் - கழிமுகம்;) நீராடச் சென்ற இளைஞன் ஒருவன் நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.டபிள்;யு. எம் . மௌசுன்; தெரிவித்தார்.
இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) மாலை 5.10 மணியளவில்; இடம்பெற்றுள்ளது. தளுபத்தை, கிராமோதய மாவத்தையைச் சேர்ந்த சேர்ந்த அப்துல் பரீத்; முபீன் அஹ்மத் என்ற 20 வயது இளைஞரே சம்பவத்தில் பலியானவராவார். தனியார் ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றும் இவருக்கு இரு இளைய சகோதரிகள் உள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்ததாவது.
சம்பவத்தில் பலியான இளைஞரும் அவரது நண்பர்கள் மூவரும் கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்மல்துறை பிரதேசத்தில் உள்ள ஆற்றுமுகத்தில் (கடலும் மாஓயா ஆறும் ஒன்று சேரும் இடம்) மாலை 4.45 மணியளவில் நீராடச் சென்றுள்ளனர். மாலை 5.10 மணியளவில் அப்துல் பரீத்;
முபீன் அஹ்மத் என்ற இளைஞர் திடீரென நீரில் மூழ்கி காணமால் போயுள்ளார். இதனை அடுத்து இது சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) மாலை 5.10 மணியளவில்; இடம்பெற்றுள்ளது. தளுபத்தை, கிராமோதய மாவத்தையைச் சேர்ந்த சேர்ந்த அப்துல் பரீத்; முபீன் அஹ்மத் என்ற 20 வயது இளைஞரே சம்பவத்தில் பலியானவராவார். தனியார் ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றும் இவருக்கு இரு இளைய சகோதரிகள் உள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்ததாவது.
சம்பவத்தில் பலியான இளைஞரும் அவரது நண்பர்கள் மூவரும் கொச்சிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்மல்துறை பிரதேசத்தில் உள்ள ஆற்றுமுகத்தில் (கடலும் மாஓயா ஆறும் ஒன்று சேரும் இடம்) மாலை 4.45 மணியளவில் நீராடச் சென்றுள்ளனர். மாலை 5.10 மணியளவில் அப்துல் பரீத்;
ஞாயிற்றுக்கிழமை இரவு தேடுதல் நடத்திய போதும் சடலம் கண்டுபிடிக்கப்படாத நிலையில் இன்று திங்கட்கிழமை காலை 6.30 மணியளவில் கடற்படையினர் சடலத்தை சம்பவம் இடம்பெற்ற ஆற்றுமுகப் பகுதியில் இருந்து மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக சடலம் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது என்றார்.
இச்சம்பவம் தொடர்பாக கொச்சிக்கடை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் இடம்பெற்ற ஆற்றுமுகப் பகுதியில் இதற்கு முன்னர் 100 இற்கு நீரில் மூழ்கி பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Post a Comment