Header Ads



"சந்திரிக்காவின் கணவர் உயிருடன் இருந்திருந்தால், எம்முடன் இணைந்து அரசிற்கு எதிராக போராடியிருப்பார்"

விஜயகுமாரதுங்க காலத்தைப் போன்றே இந்தக் காலமும் நெருக்கடியானது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

விஜயகுமாரதுங்கவின் 28ம் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

செய்யாத குற்றத்திற்காக இன்று சிறையில் அடைக்கின்றார்கள். இதுதான் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏற்படக்கூடிய நிலைமையாகும்.

அன்று விஜயகுமாரதுங்கவிற்கு ஏற்பட்ட நிலைமையே இன்றும் காணப்படுகின்றது. இன்று பிரதமர் ஊடக நிறுவனங்கள் மற்றும் நபர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு
திட்டுகின்றார்.

லசந்த விக்ரமதுங்க தொடர்பில் விசாரணை நடத்த உரிமையுண்டு. எனினும் விசாரணை நடத்தும் போது நாடாளுமன்றின் ஹன்சார்ட் அறிக்கையை வாசித்து
பார்க்கவும்.

நான் நினைக்கின்றேன், விஜயகுமாரதுங்க உயிருடன் இருந்திருந்தால் அவரும் எம்முடன் இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக போராடியிருப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்படமாட்டார்....என் உயிர் உள்ள வரை ஒரு துன்பமில்லை அவர்கள் கண்ணீர்கடலிலே விழமாட்டார்...ஊமைகள் ஏங்கவும் உன்மைகள் தூங்கவும் நானா பார்த்திருப்பேன்????

    ReplyDelete

Powered by Blogger.