Header Ads



ஜனாதிபதி மைத்திரிக்கு, நோபல் பரிசு..?


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளுக்காக அவருக்கு நோபல் பரிசு கூட கிடைக்கலாம் என கடுவலை மாநகர சபையின் முன்னாள் மேயர் ஜீ.எச். புத்ததாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்கிய பின்னர், அவரை கட்சியை கொண்டு நடந்த வழிவிட வேண்டும்.

மகிந்த ராஜபக்ச கனவானை போல் மரியாதையாக இருந்து கொண்டு கட்சியை முன்னோக்கி கொண்டு செல்ல, ஜனாதிபதிக்கு உதவ வேண்டுமே அன்றி காலை பிடித்து இழுக்கக் கூடாது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனநாயகவாதி, அதிகாரத்தை அதிகரித்து கொள்வதற்கு பதிலாக குறைத்து கொண்டுள்ளார். ஜனாதிபதி ஒருவர் 6 ஆண்டுகள் ஆட்சியில் இருப்பதை 5 ஆண்டுகளாக குறைத்தார்.
ஜே.ஆர். ஜெயவர்தனவின் அரசியலமைப்புக்கு பதிலாக ஜனநாயக ரீதியான அரசியலமைப்பு ஒன்றை கொண்டு வர ஜனாதிபதி முயற்சித்து வருகிறார்.

எனினும் மகிந்த ராஜபக்ச அரசியலமைப்பு மூலம் தனது அதிகாரத்தை அதிகரிப்பதற்காக 24 மணிநேரத்திற்குள் அரசியலமைப்பு திருத்தச்சட்டம் ஒன்றை கொண்டு வந்து நிறைவேற்றினார் எனவும் புத்ததாச குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.