கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மீண்டும், இணைந்து கொள்ளுமாறு அனுரகுமார அழைப்பு
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க நேற்று பண்டாரவளை பிரதேசத்தில் நடைபெற்ற பைவத்தின் போது பகிரங்க அழைப்பொன்றை விடுத்தார்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களையும் விலகிச் சென்றவர்களையும் கட்சியில் மீண்டும் இணைந்து கொள்ளுமாறே அனுரகுமார திசாநாயக்க இந்த பகிரங்க அழைப்பினை விடுத்தார்.
எனினும் கட்சியில் இருந்து நியாயமான காரணத்துடன் விலக்கியவர்களை மீணடும் செயற்பாடுகளுடன் இணைத்துக் கொள்ள முடியாது எனவும் கட்சியை பிளவுபடுத்த, கட்சியில் குழுக்களை உருவாக்குவதற்கு செயற்பட்டவர்களுக்கு கட்சியில் இடமளிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்தார்.
Post a Comment