Header Ads



நரேந்திர மோடியுடன் டெல்லி இமாம் திடீர் சந்திப்பு

டெல்லி ஜும்மா மசூதி இமாம் சையது அகமது புகாரி இன்று பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு எனக்கூறி அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்படுவதற்கு தனது வருத்தத்தை தெரிவித்தார்.  ஐ.எஸ், இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அப்பாவி இளைஞர்கள் துன்புறுத்தப்படக்கூடாது என்றும் மோடியிடம் ஷாகி இமாம் வலியுறுத்தியதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், தீவிரவாத குற்றச்சாட்டுகளில் பெரும் எண்ணிக்கையில் முஸ்லீம் இளைஞர்கள் சிறையில் வாடி வருகின்றனர்.இது போன்ற  கைது நடவடிக்கையின் போது வெளிப்படைத்தன்மை அவசியம் எனவும் பிரதமரிடம் இமாம் வலியுறுத்தியதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.சிறுபான்மை கல்வி நிலையங்களான ஜாமியா மில்லியா இஸ்லாமியா மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகங்கள் தொடர்பான மத்திய அரசின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

அதற்கு பிரதமர் மோடி, இந்த பிரச்சினைகள் குறித்து கவனிப்பதாகவும், மத ஒற்றுமை பாதிக்கப்படும் வகையில் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்றும் உறுதி அளித்ததாக இமாம் சையது புகாரி தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.