"துருக்கி மீதான தாக்குதலுக்கு, சிரியாதான் காரணம்"
-Musthafa Ansar-
YPG சிரியா அரசின் கூலிப்படை, எனவே அங்காரா தாக்குதலுக்கு சிரியா அரசு நேரடியாக பொறுப்புச் சொல்ல வேண்டும். சிரியா அரசுக்கெதிராக எந்தவித நடவடிக்கையையும் எடுப்பதற்கு எமக்கு உரிமை இருக்கிறது.
தாக்குதல் நடத்தியவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். ஸாலிஹ் நேஹார் என்ற சிரியப் பிரஜையே தாக்குதலை மேற்கொண்டவர். இவர் வட சிரியா நகரமான அமுடாவில் 1992 இல் பிறந்தவர்.
தாக்குதலோடு சம்பந்தப்பட்ட YPG/PKK ஆகிய தீவிரவாத அமைப்புக்களுக்கு எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையிலும் பதிலடி கொடுக்கப்படும்.
குர்திஷ் தீவிரவாதிகள் அஸாஸ் நகர் மீது தாக்குதல் மேற்கொள்வதற்கு வான்படை உதவி வழங்கும் ரஷ்யாவின் செயலை வன்மையாகக் கண்டித்தார் பிரதமர் அஹ்மத் தாவுதொக்லு.
"தீவிரவாதக் குழுக்களை அப்பாவி மக்கள் மீதும் துர்க்கி மீதும் ஏவிவிட வேண்டாம் என்று ரஷ்யாவை நான் மீண்டும் எச்சரிக்கிறேன்."
"இந்த விளையாட்டு ஒரு நாள் உங்களை நோக்கித் திரும்பப் போகிறது என்பதை கூலிப்படைகளை துர்க்கி மீது ஏவிவிட நினைக்கும் அனைவரும் அறிந்துகொள்ளுங்கள்."
Post a Comment