Header Ads



இனவாத அடிப்படையிலான பாதயாத்திரைக்கு, மகிந்த ஆதரவு பௌத்த பிக்குகள் திட்டம்..!

முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான தரப்புக்கள், அரசாங்கத்திற்கு எதிராக பாத யாத்திரையொன்று செல்லவுள்ளது.

அரசாங்கம் இம்முறை தேசிய சுதந்திர தின நிகழ்வுகளை கொழும்பு காலி முகத்திடலில் நடாத்த உள்ளது.

இந்த நிகழ்வுகளை சீர்குலைக்கும் நோக்கில் மஹிந்த தரப்பு எதிர்வரும் 3ம் திகதி பாத யாத்திரை செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார் இந்த பாத யாத்திரை பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

இனவாத அடிப்படையில் இந்த பாத யாத்திரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விஹாரமஹாதேவி பூங்காவுக்கு அருகாமையில் அமைந்துள்ள புத்தர் சிலைக்கு எதிரில் ஆரம்பாகும் பாத யாத்திரை, ஜனாதிபதி செயலகம் வரையில் சென்று மகஜர் ஒன்றை ஒப்படைக்க உள்ளனர்.

இந்த மகஜரை எவரும் ஏற்றுக்கொள்ள முன்வராவிட்டால் அந்த இடத்தில் அதிஸ்டான பூஜையொன்றை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் நாரஹென்பிட்டி அபாயாரமயவில் வைத்து விஹாரையின் பீடாதிபதி முரத்தட்டுவே ஆனந்த தேரரினால் இந்த போராட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் பௌத்த பிக்குகளும் பொது மக்களும் பங்கேற்க உள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.