Header Ads



இன்றைய அமைச்சரவை கூட்டத்தில், இலங்கை கிரிக்கெட்

கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக திலங்க சுமத்திபால நியமிக்கப்பட்டமை தொடர்பிலுள்ள சட்ட பிரச்சினைகள் பற்றி துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சர் அர்ஜுண ரணதுங்க இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பொழுது கருத்து வெளியிட்டார்.

சர்வதேச பூக்கிஸ் கவுன்சிலில் திலங்க சுமதிபால அங்கம் வகிப்பதன் காரணமாக அவரால் அண்மையில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் கலந்துக்கொள்ள இயலவில்லை.

சர்வதேச பூக்கிஸ் கவுன்சில் உறுப்பினர்கள் சர்வதே கிரிக்கெட் கவுன்சிலை பிரதிநிதித்துவப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதென அமைச்சர் அர்ஜீன ரணதுங்க குறிப்பிட்டார்.

சர்வதேச நீதியை கருத்திற்கொள்ளாது திலங்க சுமதிபாலவிற்கு இலங்கை கிரிக்கெட் சபையில் பதவியொன்றை வழங்கியமையானது சர்வதேச ரீதியில் இலங்கைக்கு தலை குனிவை ஏற்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு மறுமொழியளித்த விளையாட்டு துறை தயாசிறி ஜயசேகர அமைச்சர் திலங்க சுமதிபால குற்றமற்றவர் என்பதை சர்வதே கிரிக்கெட் சங்கத்திடம் நிரூபிக்குமாறு தான் ஆணையிட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஜனாதிபதி தலையிட்டு இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்கவுள்ளார். அதன் அடிப்படையில் எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் ஒன்றிணைந்து இப்பிரச்சினை தொடர்பாக விரிவாக கலந்தாலோசிக்கவுள்ளனர்.

No comments

Powered by Blogger.