Header Ads



தப்பித்துக்கொள்ள மகிந்த முயற்சி - மைத்திரிக்கு இரகசிய தகவல் அனுப்பிவைப்பு..?

-Tw-

கடந்த அரசாங்கத்தின் போது ராஜபக்ஷ குடும்பத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய மோசடிகள் மற்றும் கொலைகள் தொடர்பான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நடவடிக்கையினால் நிலை குலைந்துள்ள ராஜபக்ஷ குடும்பம் அதிலிருந்து தப்பித்துக் கொள்ள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தனது குடும்பத்திற்கு எதிராக முன்னெடுக்கும் விசாரணைகளை இடை நிறுத்தினால் அரசியலிருந்து ஓய்வு பெறுவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது குறித்து இரகசிய பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தனது நிலைப்பாடு குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக, இரகசிய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

அண்மைக்காலமாக மஹிந்த தலைமையிலான புதிய அரசியல் கட்சி ஒன்று தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் முக்கிய நோக்கமும் இந்த விசாரணை நடவடிக்கைகளை இடைநிறுத்தி கொள்வதற்கென தெரியவந்துள்ளது.

எனினும் எந்தவொரு காரணத்திற்காகவோ அழுத்தங்களுக்காவோ விசாரணைகளை இடைநிறுத்த ஜனாதிபதி மைத்திரி இணக்கம் தெரிவிக்கவில்லை..

கட்சி பிளவடைந்தாலும் அனைத்து விசாரணைகளும் சாதாரண முறையில் இடம்பெற வேண்டும் என நிலைப்பாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 comment:

  1. It is all only about you and your family ? Mr Rajapaksa,
    you humiliated everybody ! Sinhala,Tamil,Muslim and
    Christian. You never even imagined that one day you will
    be at the receiving end ! Prove that you are nothing but
    honest in the court of justice and go to a good night's
    sleep ! Do not just go on saying things about you , just
    prove them . Now is the time.

    ReplyDelete

Powered by Blogger.