கொழும்பிலுள்ள பள்ளிவாசல்கள் முன்வருமா..?
-அபூ உமர் அன்வாரி-
ஒரு நாட்டில் தலை நகரம் அதை அண்டிய பிரதேசங்கள் மிக முக்கியமான பிரதேசங்களாகும்.இது இதை அபிவிருத்தி செய்வது மற்றும் அதன் வாழக்கை தராதரத்தினை உயரத்துவது எனபது மிகமுக்கியமான ஒன்றாகும். புறக்கணிக்கப்படும் போது பல பாதகமான விளைவுகளை எதிரக்கொள்ள நேரிடும்.இதன் படி கொழும்பு கொழும்பை அண்டிய பிரதேசங்கள் பற்றிய சில விடயங்களை ஆராய வேண்டியது காலத்தின் தேவை என்பதற்க்கேற்ப.சில அம்சங்கள்-
இப்பிரதேசத்தில் பல இனத்தையும் சார்ந்த மக்கள் வசிக்கின்றனர்.இருப்பினும் இஸ்லாமிய சமூகத்தினை பற்றி பார்க்கும் போது பல தேவைகள் காணப்படுவதை காலம் உணர்த்துகின்றது. இச்சமூகம் சுகாதார,கல்வி,பொருளாதார, வதிவிட பிரச்சிணை என பல பிரச்சினைகளை எதிர்க்கொள்கின்றனர் என்றால் அதை எவராலும் மறுக்க முடியாது.
விகிதாசாரத்தினை நோக்கும் போது ஆரோக்கயமற்ற ஒரு விகிதாசார தொகையாக சேரிப்புறங்களிலும், சுகாதாரத்தினை அச்சுறுத்தும் விததில் அமைந்த வீடுகளில் பலரும் காலத்தினை ஓட்டுகின்றனர்.இதனால் பல சுகாதார நோய்களுக்கும் பிரச்சினைகளையும் எதிர்நோக்கின்றனர்.இது இவ்வாறு தொடருமாயின் இதுவோர் பாரிய அச்சுறத்தலாக அமையும் என்பது திண்ணம். மேலும் காலத்துக்கு காலம் மழை,கழிவு நீர் பிரச்சினை என பலரும் வாடுகின்றனர்.இடவசதியின்மை, இடப்பிரச்சினை,ஆகியவைகள் மூலம் பலகுடும்ப உருப்பினர் சேர்ந்து வாழும் நிலை அதிகரித்துள்ளது.
இதன் விளைவு சில போது கலாச்சார சீர்கேடுகளையும் தோற்றுவித்தன.என்பதை உணரத்தும் பல சம்பவங்களை ஊடகங்கள் சான்றுகளாக தந்துள்ளன.வாழ்வின் முகமுக்கிய அடிப்படைகளை அடையும் போறுட்டு பல் சவால்களை எதிர்க்கொள்ளும் இவர்களுக்கு ஏனைய முக்கிய அம்சங்களான கல்வி,மனித வள அபிவிருத்தி ஆகியவற்றினை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பங்களை கைநலுவி போகிறது.தமது அடிப்படை தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் கல்வியை இடை நிறுத்திவிடுகின்றனர்.இவ்வாறு நிறுத்தியவரகள் எவ்வாறேனும் தமது இலக்குக்ளை அடையும் போறுட்டு சாதாரன தொழில்களை செய்கின்றனர்.
இதில் வரும் குறைந்த வருமானம் அதிகரித்த செலவீனம் ஆகிய வற்றினை ஈடு செய்ய முடியாத போது குற்றச்செயல்களை கூட செய்கின்றனர். இதன் விளைவு பல குடும்பங்கள் தெருவுக்கு வரும் நிலை. சில ஆய்வுகளின் படி சிறையில் வாடும் எண்ணிக்கை பல்கலைக்கழகங்களில் கற்கும் மாணவர் தொகையை விட அதிகம் என காட்டுகிறது.
இன்னும் மார்க்க ரீதியில் பார்கத்கும் போது கூட நவ நாகரீக கலாச்சாரத்தினை தமது மார்கமாக எடுத்து நடக்கும் ஆண்களையும் பெண்களையும் காணலாம்.இதன் பின்னியை நோக்கும் போது மார்க்கத்தில் போதிய அறிவினமை என்பது விடையாக அமைகிறது.இவ்வாறு அனைத்து விடயங்களிலும் ஆய்வுக்கு பின் விடையாக கிடைப்பது ஒரு ஆரோக்கயமற்ற விகிதாசாரமாகும்.இன்றைய காலத்தின் தேவையாக இருப்பது.இத்தகைய நிலைகளை சீர் செய்வது.
அதிகரித்த தொண்டு நிறுவனங்கள் சமூகப்பணியென ஊடகங்களை நிறப்புகின்றன. இருப்பினும் அவை உரியவர்களுக்கு செல்கின்றதா என பார்க்கும் போது அது ஒரு கேள்விக்குறியாகும்.வறுமை ஓழிப்பு என கூறுகின்றனர்.இருப்பினும் வறியவர் தொகை அதிகரித்துச்செல்வதையே காணலாம்.இவைகள் மாற வேண்டும். முதன்மைப் படுத்தப்படுபவர்கள் உரிய உதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.அவர்கள் அவ்வுதவிகளுக்கு பொறுத்தமானவர்களாக இருக்க வேண்டும்.இவர்கள் தலை நகர் அதை அண்டிய பிரதேசத்தில் வாழ்கின்றவர் ஆகவே இவர்கள் அனைத்தையும் பெற்றுள்ளனர் எனும் மாயை நீங்கி இவர்களது வாழ்வின் பல பகுதிகள் சீர் செய்ய வேண்டும் என உணர்ந்து அதை உரிய விததில் சீரமைக்கப்பட வேண்டும்.
ஒரு கசப்பான உண்மை பல தொண்டு நிறுவனங்களின் தலைமையகம் தலை நகரில் இருந்தும் இத்தகையவர்கள் புறக்கணிக்கப்படுவது ஆகும்.இஙகு காணப்படும் பள்ளிவாயில்கள் தமது கடமையை உணர்ந்து மாலை நேர வகுப்புகளை வயதில் அனைத்து பிரிவினருக்குமாக தகுதி வாய்ந்த மாரக்க அறிஞர்களால் நிகழ்த்தப்பட வேண்டும். இன்னும் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கன உரிய தீர்வுகளை பெற்றுக்கொள்ள உரிய வர்களிடம் எத்தவைக்க வழி செய்ய வேண்டும். இத்தகைய பிரச்சினைகள் தொடரும் போது அது பாரிய விளைவுகளை சமூகத்தில் தோற்றுவிக்கும். ஆகவே வெள்ளத்துக்கு முன் அனைகட்டுவது காலநிலையின் தேவை.
Post a Comment