பஹ்ரைனில் உள்ள இலங்கை தொழிலாளர்களின், சேவைக்கு அந்நாட்டு இளவரசர் பாராட்டு
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் பஹ்ரைன் இளவரசர் சல்மான் பின் ஹமட் அல் கலீபாக்கும் இடையே சமீபத்தில் பஹ்ரைனில்; இடம்பெற்ற உயர் மட்ட சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான புதிய உறவுகளை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் ரிஷாட் பதியுதீன், பஹ்ரைன் இளவரசரை அவரது அரண்மனையில் சந்தித்த பின்னர் பஹ்ரைன் வர்த்தக அமைச்சரும் சுற்றுலாத்துறை அமைச்சருமான சயீத் பின் ரஷீட் அல்-சாயானியும் சந்தித்தார். அமைச்சருடன் இச்சந்திப்பில் பஹ்ரைனுக்கான இலங்கை தூதுவர் டாக்டர்.ஏ.சஜ்.யூ மெண்டிஸ் மற்றும் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரியாஜ் பதியுதீனும் இணைந்துக்கொண்டனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அனுப்பி வைத்த வாழ்த்து செய்திகளையும் பிராந்திய மற்றும் பலதரப்பு பேரவைகளில் குறிப்பாக ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு பஹ்ரைன் நேர்மையான ஆதரவு வழங்கியமைக்குமான பாராட்டினையும் அமைச்சர் ரிஷாட்பதியுதீன் இச்சந்திப்பின் போது இளவரசருக்கு தெரிவித்தார்.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெயர்ந்தவர்களுக்கு 200 வீடுகளை நிர்மாணிப்பதற்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலரினை பஹ்ரைன் இளவரசர் வழங்கியமைக்கும் இலங்கை அரசு சார்பாக அமைச்சர் ரிஷாட் பஹ்ரைன் இளவரசருக்கு மேலும் நன்றியை தெரிவித்தார்.
மேலும் இலங்கை தொழிலாளர்களுக்கு தொழில் புரிவதற்கு வசதியான சூழலினை விரிவுபடுத்தியமைக்கு பஹ்ரைன் இராச்சியத்திற்கு அமைச்சர் நன்றியை வெளிப்படுத்தினர். பெரும்பாலும் தொழில் தகமைகளினை கொண்ட நம் நாட்டவர்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 9%சத வீதத்தினை பங்களிப்பு செய்கின்றார்கள் என்றும் அமைச்சர் ரிஷாட் சுட்டிக்காட்டினார்.
பஹ்ரைன் முதலாளிகளாலும் தொழிலாளர்களாலும் மிகவும் கவரப்பட்ட, திறமையான தொழில் தகமைகளினையுடைய இலங்கை தொழிலாளர்கள் அந்தந்த துறைகள், வியாபாரம் மற்றும் தொழில்முறைகள் மீது; அர்ப்பணிப்புடனும் உறுதியாகவும், கட்டுப்பாடாகவும் செயற்படுவதால் இளவரசரால் பாராட்டப்பட்டனர். தெற்காசியப் பிராந்தியத்தில் ஒரு மையமாக இருக்கின்ற இலங்கை, வேகமாக வளரும் நாடாக தன்னை தயார்படுத்தி உள்ளது என்று இளவரசர் ஏற்றுக்கொண்டுள்ளார். அத்துடன், தெற்காசியாவுக்கு அப்பால் முழுப் பிராந்தியத்தின் சேவைகள் மற்றும் வசதிகளை இலங்கை விரிவாக்கி வருகின்றது எனவும் இளவரசர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார ரீதியிலான உறவுகளை பலப்படுத்தல், பொருளாதார, வணிகம், சுற்றுலா, வர்த்தகம் மற்றும் முதலீடுகள் தொடர்பான விடயங்கள்; விரிவாக இச்சந்திப்பில் ஆராயப்பட்டது.
இச்சந்திப்பில் அமைச்சர் ரிஷாட் கருத்து தெரிவிக்ககையில்: கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற தேர்தலுக்கு பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களின் நிர்வாகத்தில் நாட்டின் அதிகளவு நிலையான அரசியல் மற்றும் பொருளாதாரம் ஏற்பட்டுள்ளது. இலங்கையின் சுற்றுலாத்தறை இந்த ஆண்டு இறுதியில் இரண்டு மில்லியனை நெருங்கும். பெருந்திரளான சுற்றுலாப் பயணிகள் ஈர்க்கப்பட்டுள்ளனர். மற்றும் நாட்டில் அமைதியான சூழல் ஏற்பட்டிருப்பதோடு அபிவிருத்தியும் எட்டப்பட்டுள்ளது. 2015 ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட. சமீபத்திய பாராளுமன்ற தேர்தலில் ஐ.தே.க தேர்ந்தெடுக்கப்பட்டது. முந்தைய தேர்தல்களினை ஒப்பிடும்போது இத் தேர்தல் மிகவும், வெளிப்படையானது, நியாயமானதும் மற்றும் அமைதியான முறையில இடம்பெற்றது.
அன்னிய ஈடுபாட்டுடன் முந்தைய நிர்வாகத்தின் மத்தியில் இருந்த இலங்கையின் ஜனநாயக முறைகள்;, சட்டம் , ஆட்சி, நீதியின் ஆட்சி, நல்லாட்சி, பேச்சு சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகியவற்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களின் நிர்வாகத்தின் கீழ் மீட்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்குமிடையே வர்த்தக, பொருளாதார ரீதயான உறவுகள் நீடித்து வருவதாக சுட்டிக்கபாட்டிய அமைச்சர் இலங்கைக்கும் பஹ்ரைனுக்கும் இடையிலான மொத்தமான வர்த்தக புரள்வு சிறிய தொகையாக - 2014 ஆம் ஆண்டில் 26 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தபோது இலங்கையின் ஏற்றுமதி 19 மில்லியன் அமெரிக்க டொலராகவும் இறக்குமதி 7 மில்லியன் அமெரிக்க டொலராகவும் காணப்பட்டது. அதே ஆண்டில் பஹ்ரைனுக்கான இலங்கையின் பிரதான ஏற்றுமதியாக தேயிலை, உணவு ஏற்பாடுகள், வாசனை திரவியங்கள் , டயர்கள் மற்றும் ரப்பர் பொருட்கள் ஆகியன காணப்பட்டன. இலங்கைக்கான முக்கிய இறக்குமதியாக எண்ணெய், பெற்ரோலிய பொருட்கள், உறைந்த மீன், நெய்த துணிகள், பருத்தி நெய்த துணிகள் ஆகியன காணப்பட்டன என்றார். வர்த்தக நடவடிக்கைகளை முன்னேற்றுவதற்கான தேவைப்பாடு நம்மிடம் உள்ளது.இரண்டு தரப்பினரக்குமிடையே வர்த்தக ஊக்குவிப்பு நிகழ்வுகளை மேற்கொண்டு ஊக்குவிப்புக்களை வழங்கவேண்டும்.
‘இலங்கை முதலீட்டு மற்றும் வர்த்தக மாநாடு 2016’ எதிர்வரும் மார்ச் மாதம் 8 ஆம் திகதி தொடக்கம் 10; ஆம் திகதி வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் பங்கேற்பதற்கு பஹ்ரைன் வர்த்தக சம்மேளனத்தினர் உட்பட வர்த்தக பிரமுகர்கள் அரச அதிகாரிகளுக்கு அழைப்பு விடுவிக்கின்றோம.;
பஹ்ரைன் உலகில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் பொருளாதார மையமாக ஏனைய மத்திய கிழக்கு நாடுகளைப் போன்று எண்ணெயே பஹ்ரைனின் பிரதான ஏற்றுமதியாகும். 60 வீதம் எண்ணெயை ஏற்றுமதி செய்வதன் மூலம் பஹ்ரைன் அரசு நாட்டின் மொத்த வருவாயில் 70 வீதத்தைப் பெறுகிறது. அலுமினிய உற்பத்தி நாட்டின் இரண்டாவது ஏற்றுமதி பொருளாக உள்ளது. பஹ்ரைன் உயர் வருமான பொருளாதாரம் கொண்ட நாடாக உலக வங்கி அங்கீகரித்துள்ளது.
“இரு நாடுகளும் பல நூற்றாண்டுகளாக மிகவும் சுமூகமான மற்றும் இராஜதந்திர பரஸ்பர உறவு கொண்டிருக்கின்றன. பஹ்ரைன் ஒரு திறந்த பொருளாதாரம் கொண்ட நாடாகும். வெளிப்படையான வர்த்தகம் மற்றும் முறையான முதலீடுகள் இவையே பஹ்ரைனின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியக் காரணம். வர்த்தகம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்த பஹ்ரைன் அரசு உறுதியாக இருப்பதாகவும் இரு நாடுகளுக்குமிடையில் நல்ல புரிந்துணர்வும் திருப்தியான உறவு இருப்பதை உணர்கின்றோம். இருநாடுகளுக்குமிடையிலான வர்த்தக பொருளாதார ரீதியான உறவு மேலும் பலப்படுத்தப்படவேண்டும. எதிர் காலத்தில் பஹ்ரைன் இலங்கையில் முதலீட்டு துறையில ஆர்வம் செலுத்த வேண்டும் என நான் ஆலோசனை தெரிவிக்கின்றேன். எதிர்காலத்தில் எமக்கிடையிலான நல்லுறவுகளும் வர்த்தக மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளும் மேலும் முன்னேற்றமடையுமென நான் உறுதியாக நம்புகின்றேன். என அந்நாட்டின் வர்த்தக அமைச்சரும் சுற்றுலாத்துறை அமைச்சருமான சயீத் பின் ரஷீட் அல்-சாயானி தெரிவித்தார்.
அமைச்சர் ரிஷாட் பஹ்ரைன் இளவரசர் சல்மான் பின் ஹமட் அல் கலீபா மற்றும் பஹ்ரைன் வர்த்தக அமைச்சரும் சுற்றுலாத்துறை அமைச்சருமான சயீத் பின் ரஷீட் அல்-சாயானியும் சந்தித்த பின்னர். பஹ்ரைனில் நடைபெற்ற வர்த்தக சம்மேளன மாநாட்டில் விசேட அதிதியாக கலந்துக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment