கண்களுக்கு தெரியாமல்போன "ஹரிஸ்ணவி"
போராளிக்கு மட்டும்தான் மானம் உண்டா பொது ம(க்)களுக்கு இல்லையா ...???
கலாச்சாரத்தை பாதுகாக்க முடியாத எழுத்துலகம் யாருக்கு வேண்டும்..??
உங்கள் கழிவுகளை விற்க மக்கள் வேண்டும் ஆனால் நீங்கள் மக்களை கண்டு கொள்ள மாட்டீர்கள். பிரபலங்களும் பிரபலங்களுக்கு ஜால்ரா போடும் கூட்டமும் சிந்திக்கவேண்டும் இனியாவது ..
#இசைப்பிரியாக்கு உலக நீதி கேட்பவர்கள் முதலில் #வித்தியாக்கும் #ஹரிஸ்ணவிக்கும் உள்ளூரில் நீதியை தேடுவார்களா ....??
ஊடகவியலாளர்கள்,எழுத்தாளர்கள் ,இலக்கியவாதிகள் என்பவர்கள் எப்பொழுதும் ஒரு சமூகம் சார்ந்து சிந்திக்க வேண்டியவர்கள் ,அந்த சமூகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிர் குரல் எழுப்பவேண்டியவர்கள்,கண்டனங்களை பதிவு செய்வதும் முறையிடுவதும், சுட்டிக்காட்டி மக்கள் மத்தியில் கொண்டு போவதுமாக இந்த எழுத்துலகம் இயங்க வேண்டியது ,ஒருகாலத்தில் அப்படித்தான் இயங்கியது எனலாம் .....
ஆனால் இப்பொழுது எல்லாம் ஆளாளுக்கு இலக்கிய சங்கங்களும் ,வட்டம் சதுரம் என இலக்கிய குழுக்களும் தாம் சார்த்த தங்களை சாரும் நபர்களுக்கு பஜனை பாடவே தங்களின் முழு நேரத்தையும் செலவழிப்பதும் ,எவன் காலை பிடித்தாவது பெயர் பெறத் துடிப்பதும் அதற்காக அம்மணமாக நிற்க கூட துணிவதுமாக மிக அநாகரிகமான மீன்சந்தை வியாபாரமாக மாறி இருக்கிறது இந்த எழுத்துலகம் ........
அதிலும் ஈழ இலக்கியவாதிகள் இந்தியாவில் ஒரு தலித் பெண்ணுக்கு ஏதாவது பங்கம் ஏற்பட்டால் தங்கள் உடலில் காயம் ஏற்பட்டது போல துடித்து எழுவதும்,கூட்டறிக்கை ,இலக்கியவாதிகள் கையொப்ப மனு என அவர்கள் செய்யும் அழும்புக்கு அளவே இருக்காது.
ஏனெனில் தமிழ்நாடு என்னும் பெரும் சந்தியில் சிறு கீரை விற்க இவைகள் இவர்களுக்கு அவசியம் ஆகிறது .....
அதிலும் ஈழத்தில் இருக்கும் இலக்கிய காளான்கள் மாதம் நாலு முறையாவது இலக்கிய சந்திப்பு நடத்துவதும், அதில் பெண்கள் கலந்துகொள்ளவில்லை என கவலைப்படுவதுமாக இருக்கும் ஒரு சில குறுப்புக்கள், இந்த சமூகம் சார்த்து சிந்திப்பதே இல்லை அதற்காக ஒருநாளும் பேசியதும் இல்லை குரல் எழுப்பியதும் இல்லை, எங்காவது பிரபலம் கிடைக்கும் என்றால் அங்கு போய் நின்று படத்துக்கு போஸ் கொடுப்பதும் ,செல்பி எடுத்து போடுவதும் அத்துடன் முடிந்துவிடும் போராட்டம் ...
ஆக இணையங்களில் நாடுபிடிக்கும் போராளிகளும் தமிழ்தேசிய அதி உச்ச விசுவாசிகளும் ,தங்களை புரட்சியாளர்கள் என காட்டுவதற்காக அடிக்கடி படங்களை மாற்றி வீரவணக்கம் போடுவதும்,தளபதிகளின் படங்களை போட்டு கதை சொல்வதுமாக அவர்களின் பொழுது போகிறது ....
ஆக ஈழ எழுத்தாளர்கள் என அறியப்படும் பலர் ஒரு இனம், அந்த சமூகம் பட்ட அவலங்களை எப்படியாவது விபரித்து கதை எழுதி ,அதை எங்காவது ஓடி ஓடி விற்று தங்களின் பிழைப்பையும் , இருப்பையும் தக்கவைக்க எடுக்கும் முயற்சியில், ஒரு துரும்பாவது சமூகம் சார்த்து ஓர் சீரழிவு ,பெண்கள் மீதான வன்முறை ,என்பவற்றுக்கு குரல் கொடுப்பதில்லை ,இசைப்பிரியாக்கு காட்டுகூச்சல் போடும் இந்த அடிப்படை அறம் பிழைத்த நியாவதிகள் வித்தியாவும் , ஹரிஸ்ணவியும் கண்களுக்கு தெரிவதில்லை .........
ஆக எமக்கு இசைப்பிரியா மட்டுமே ஈழபெண்ணாகவும் பாலியல் வல்லுறவுக்கு ஆள்பட்ட பெண்ணாகவும் தெரிவதால், எம் சமூகத்தால் சீரழிக்கப்படும் பெண்கள் பெண்களாக தெரிவதில்லை சிங்களவன் செய்வது மட்டுமே பாலியல் வன்புணர்வு இதை தமிழர் செய்தால் அதை பத்தோடு பதினொன்றாக கடந்து போகும் மனநிலையில் நாம் வாழ்கிறோமா .....
கொலை, கற்பழிப்பு, கொள்ளை, ஊழல் போன்ற பெருங் குற்றங்களுக்கு குறுகிய காலத்தில் மரணதண்டனை நிறைவேற்றி விடுவதே சிறந்த தீர்வாக அமையும். தண்டனைகள் மிகக் கொடூரமாகின்றவரை குற்றங்கள் மலிவாகவே இருக்கும்.
ReplyDeleteவெறி நாய் யாரையாவது கடித்துவிட்டல் அதைக்கண்டவுடனே சுட்டுகொள்வது சம்மந்தப்பட்டவைகளின் கடமையாம் ஆனால் இப்படியான காமநாய்கள் கடித்தால் கைது செய்து விளக்கமறியலாம் காலம் கடந்துவிடுதலையாம் வித்தியாசமோ 5 அறிவும் 6 அறிவும் வெறிநாய் கடித்துவிட்டு விட்டு செல்கின்றது காமநாய் குதரிவிட்டு கொலையும் செய்கின்றது ஆகவே இந்த நாயைதானே விரட்டி விரட்டி சுட்டுக்கொல்ல வேண்டும்....
ReplyDeleteதாய்ப்பாலிலும் இரசாயனம் கலந்து அதையும் 'விற்கமுடியுமா?' என்று சிந்திக்கும் கேடுகெட்ட வியாபாரிகளை நினைத்தால் குமட்டுமல்லவா அதுபோலத்தான் இத்தகையோரும்.
ReplyDeleteஅனைத்திலும் அரசியல் பார்ப்பவர்களிடம் உண்மையான இரக்கத்தை எதிர்பார்ப்பது கசாப்புக்கடைக்காரனிடம் அகிம்சையை வேண்டிநிற்பது போன்றது.
இத்தகைய நாய்களுக்கு அவசரமாக அரசாங்கம் மரண தண்டனையை அமுலுக்கு கொண்டு வர வேண்டும்
ReplyDeleteGovt must take immediate full investigation and give the maximum punishment to the culprits.
ReplyDeleteIf this incident Bering draged like othe cases such as Viddiya , Thjudeen and many more, it will not be avoide more incident will increase.
And people and internationals will have dought on govt legal system.