Header Ads



விமல் வீரவன்சவுக்கு, வாரி வழங்கிய மகிந்த - ஆதாரங்கள் பகிரங்கமாகியது

நகர அபிவிருத்தி மற்றும் பொது வசதிகள் அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் விமல் வீரவன்சவின் உறவினர்கள் மற்றும் கட்சி செயற்பாட்டாளர்கள் சிலருக்கு ஜனாதிபதி செயலகத்தில் நவீன மோட்டார் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு வழங்கப்பட்ட மோட்டார் வாகனங்களுக்காக ஜனாதிபதி செயலகத்தினால் வாடகை பணமாக மில்லியன் கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளiமை தெரிய வந்துள்ளது.

அதற்கமைய விமல் வீரவன்சவின் மூத்த சகோதரரான சரத் வீரவன்சவுக்கு Minsubishi Montero Sports ரக KT 5335 என்ற இலக்கத்தினை கொண்ட ஜுப் வண்டி ஒன்று வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான மாதாந்த வாடகையாக 150,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியின் பிரதான செயலாளராக செயற்பட்ட ப்ரியன்ஜித் விதாரணவுக்கு மாதாந்த வாடகையாக 80,000 செலுத்தி KO 1375 என்ற இலக்கத்தினை கொண்ட Toyota Allion 240 வகை வாகனம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

மாதாந்தம் 120,000 ரூபாய் வாடகை செலுத்தி PB 0645 என்ற இலக்கத்துடைய  Double Cab வாகனம் ஒன்று விமல் வீரவன்சவின் கண்டி மாவட்ட அமைப்பாளராக செயற்பட்ட நிமல் ஜயசிங்க என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளதோடு, அவரது ஹம்பாந்தோட்டை அமைப்பாளராக செயற்பட்ட கொடித்துவக்கு என்றவருக்காக NisanNavara PE 6432 ரக கெப் வாகனத்தை வழங்கியதற்காக மாதாந்தம் 120,000 வாடகை செலுத்தப்பட்டுள்ளது.

விமல் வீரவன்ச ஊடாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் காலி மாவட்டத்தில் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ப்ரியந்த பெல்லனவுக்கு 120,000 மாதாந்த வாடகை செலுத்தி JP 4312 ரக Double Cab வாகனம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

விமலின் பிரச்சார செயலாளர் மொஹமட் முஸமில் பயன்படுத்தும் KO 9480  ரக Toyota Alion 260 வாகனத்திற்காக மாதாந்தம் 80,000 வாடகை செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மொனராகலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினராக செயற்படும் பதம் உதயஷாந்தவுக்கு விமல் வீரவனசவின் ஊடாக மாதாந்தம் 80,000 வாடகை செலுத்தி KO 9416 ரக Toyota Premio வானகம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தற்போதைக்கு விமல் வீரவன்சவின் உறவினர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமான 7 பேருக்கு வாகனம் வழங்குவதற்காக வருடத்திற்கு 9 மில்லியன் ரூபாய் ஜனாதிபதி செயலகத்தினால் செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

8 comments:

  1. Talk only, no action against the wrongdoers by Yahapalanya Jokers....................

    ReplyDelete
  2. That is why Mr.Wimal is barking for mahinda in every seconds

    ReplyDelete
  3. Public money, ridiculous misuse..! ! ! so price increase, more tax, holdup developments etc etc...

    ReplyDelete
  4. execution is the punishment in china for curruption. we should follow it here too.

    ReplyDelete
  5. So why no actions...these yaha palanaya worst than them.

    ReplyDelete
  6. Nothing will go ahead unless the stupids in the majority accept that MR has done wrong doings.

    ReplyDelete
  7. கொடுத்ததெல்லாம் கொடுத்தார் மஹிந்த யாருக்காக கொடுத்தார்... மக்களுக்கா கொடுத்தார் இல்லை...குடும்ப உறவுக்காக கொடுத்தார்..விமலின் வரவுக்காக கொடுத்தார்....இப்போ கொடுத்தவனும் இல்லையென்பான் எடுத்தவனும் இல்லையென்பான்.......

    ReplyDelete
  8. Is 'Yaha Palanaya' NATO? (No Action Talking Only'?

    ReplyDelete

Powered by Blogger.