தவ்ஹீத் ஜமாத்திற்க்கு எதிரான, மத நிந்தனை வழக்கு ஒத்திவைப்பு
ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்திற்க்கு எதிராக பொது பல சேனாவினால் தாக்கல் செய்யப்பட்ட மத நிந்தனை வழக்கு இன்று (11) கொழும்பு, புதுக்கடை நீதி மன்றத்தில் நீதிபதி ஜிஹான் பிலபிட்டிய முன்னிலையில் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் தலைமையிலான குழுவினர் தவ்ஹீத் ஜமாத் சார்பில் இன்று மன்றில் ஆஜராயினர்.
எதிர்வரும் 05.05.2016 ம் தேதிக்கு வழக்கு மீண்டும் ஒத்தி வைக்கப் பட்டது.
அத்துடன் இனங்களுக்கு மத்தியில் பிரிவினையை உண்டாக்கும் விதமாக சிங்கள பாடலாசிரியர் இராஜ் இயக்கியுள்ள பாடல் இனவாதத்தை தூண்டும் விதமாக அமைந்திருப்பதினால் குறித்த பாடலுக்கு தடை விதிக்குமாறு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டதுடன் குறித்த பாடல் அடங்கிய CD யும் மன்றுக்கு ஒப்படைக்கப் பட்டது.
-ஊடகப் பிரிவு - தவ்ஹீத் ஜமாத் (SLTJ)
who ever insult any relegion should be punished.
ReplyDelete