ஐக்கிய தேசியக் கட்சியில் சரத் பொன்சேகா இணைவதை, நான் விரும்பவில்லை - ஹரீன்
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதை, தனிப்பட்ட வகையில் விரும்பவில்லை எனவும், தான் அதனை எதிர்ப்பதாகவும், அமைச்சர் ஹரீன் பிரணாந்து தெரிவித்துள்ளார்.
எனினும் கட்சியின் கொள்கைக்கு தலை வணங்கி தான் இதற்கு இணக்கம் தெரிவிப்பதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
பொன்சேகா கடந்த தேர்தலில் தோல்வியடைந்தவர் எனவும், அவரை தேசியப் பட்டியலில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வது, மக்களின் இறையாண்மையை குறைத்து மதிப்பிடுவதாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும், நாளை பொன்சேகாவின் ஜனநாயகக் கட்சி ஐக்கிய தேசிய முன்னணியுடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடவுள்ளதாகவும், எனினும் வெற்றிடமாகவுள்ள தேசியப் பட்டியல் பாராளுமன்ற ஆசனத்தை அவருக்கு வழங்குவதா என்பது தொடர்பில் இதுவரை இறுதி இணக்கப்பாட்டுக்கு வரவில்லை எனவும், ஹரீன் பிரணாந்து சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது யோசித்த ராஜபக்ஷ கைதுசெய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அது அரசியல் பழிவாங்கள் இல்லை என தெரிவித்தார்.

Post a Comment