'ஒன்றரை லட்சம் சிரியா குழந்தைகள், துருக்கியில் பிறந்துள்ளன'!
ஜெனீவா: ஒன்றரை லட்சம் சிரியா குழந்தைகள் துருக்கியில் பிறந்துள்ளன என்று துருக்கியின் துணைப் பிரதமர் லுப்தி எல்வன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக, ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் தொடக்க கூட்டத்தில் துருக்கி துணை பிரதமர் எல்வன் கூறுகையில்,
"கடந்த 5 ஆண்டுக்கும் மேலாக சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக, மனிதாபிமானத்தின் பெரும் பகுதியை துருக்கி தன்னால் முடிந்த அளவுக்கு ஏற்றுள்ளது.
துருக்கியில் பிறந்த சிரியா குழந்தைகள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1 லட்சத்து 52 ஆயிரமாக உள்ளது. எந்த அண்டைநாடுகளிலும் இல்லாத வகையில், 2.7 லட்சத்துக்கும் அதிகமான சிரிய அகதிகள் எங்கள் நாட்டில் உள்ளனர்” என்று தெரிவித்தார்.
மேலும் அவர், மேற்கத்திய நாடுகள் உள்ளிட்ட உலக நாடுகள் சிரியா மக்களுக்கு சுமத்தப்பட்டுள்ள சுமையை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Post a Comment