ஞானசாரருக்கு எதிராக, முதலாவது வழக்கு
சாட்சியாளர் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள முதல் வழக்கு, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரருக்கு எதிராக தொடரப்பட்டுள்ளது.
இலங்கையில் இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் தொடரப்பட்டுள்ள முதல் வழக்கின் விசாரணை எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ளது.
லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொடவின் மனைவி சந்தியா எக்நெலிகொடவை ஞானசார தேரர் அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
நீதிமன்றை அவமரியாதை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையிலும் ஞானசார தேரருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இனி வருங்காலங்களில் வழக்குகளுக்குச் செல்வதையே வழக்கமாக வைத்துக் கொண்டாரெனில் மிக நன்றாக இருக்கும்! கொஞ்சமாவது ஞானம் பிறக்க வாய்ப்பிருக்கும்.
ReplyDelete