அப்துர் ரவூப் தரப்பு, ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அனுப்பிவைத்த கடிதம்..!
நிர்வாகம்,
ஜப்னா முஸ்லிம்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
07.02.2016 அன்று தங்களது இணையத்தளத்தில் "72வது பிறந்த தினத்தை 72அடி கேக் தயாரித்து படு விமர்சையாகக் கொண்டாடிய அப்துர் றஊப் (படங்கள்)” எனும் தலைப்பில் தவறான செய்தி ஒன்றை படங்களுடன் வெளியிட்டீர்கள்.
2009ம் ஆண்டு 46ம் இலக்க சட்டத்தினால் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பாராளுமன்றத்தினால் கூட்டிணைக்கப்பட்ட அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் தவிசாளரும், அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம் அவர்களைப் பற்றி முற்றிலும் பொய்யான தகவலை தலைப்பாக இட்டு அவர்களின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையிலும் அவர்களின் கருத்துக்களை ஏற்றுக்கொண்ட பல்லாயிரக் கணக்கான முஸ்லிம் மக்களின் உள்ளங்களைப் புண்படுத்தும் வகையிலும், தகவலின் உண்மைத் தன்மையை ஆராயாமல் ஊடக தர்மத்தை மீறும் வகையிலும், பக்கச்சார்பான முறையிலும் தவறான செய்தியை வெளியிட்டமைக்காக வன்மையான கண்டனங்களை தெரிவிக்கின்றோம்.
05.02.2016 அன்று எங்களது ஆன்மீகத் தந்தை அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம் அவர்களின் 72வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவர்களது நீண்ட ஆயுள் வேண்டி சிறப்பு காதிரிய்யஹ் றாதிப் மஜ்லிஸும், துஆப்பிரார்த்தனையும் மற்றும் அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது. மாறாக நீங்கள் செய்தியில் குறிப்பிட்டது போன்று 72அடி கேக் தயாரித்து படு விமர்சையான பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடைபெறவில்லை. துஆப்பிரார்த்தனை மஜ்லிஸின் ரெஜிபோம் அலங்காரத்தை 72 அடி கேக்காக சித்தரித்து உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டீர்கள்.
இலங்கையில் வாழும் பெரும்பாலான முஸ்லிம்களால் பார்க்கப்படும் இணையமான ஜப்னா முஸ்லிமின் பொறுப்பற்ற செயற்பாட்டின் மூலம் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் எமது ஆன்மீகத் தந்தை அதிசங்கைக்கும் மரியாதைக்குமுரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் யு. அப்துர் றஊப் மிஸ்பாஹீ நாயகம் அவர்கள் பற்றி தவறான செய்தி வெளியிட்டமைக்கு பதிலீடு செய்யும் விதத்தில் இரண்டு தினங்களுக்குள் அதாவது (14.02.2016)ம் திகதிக்கு முன்னர் அத்தவறான செய்திக்கு மன்னிப்புக் கோரி மறுப்புச் செய்தியை விரிவாக வெளியிடுமாறும், ஏற்கனவே வெளியிடப்பட்ட அச்செய்தியை உங்களது செய்திக் கோப்பிலிருந்து நீக்குமாறும், இப்பொய்யான செய்தியை உங்களுக்கு அனுப்பிய செய்தியாளர் பற்றிய தகவலை எங்களுக்கு அறிவிக்குமாறும் கோருகிறோம். இதனை மீறும் பட்சத்தில் எமது நிறுவனத்திற்குள்ள தத்துவப்படி தகுதியான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு
செயலாளர்,
மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA (Hons)
0779910449
பிற்குறிப்பு - இங்கு சுட்டிக்காட்டப்படும் செய்தியை அனுப்பிவைத்தவரின் பெயர் விபரங்களை உயிரே போனாலும் ஜப்னா முஸ்லிம் இணையம் இன்ஷா அல்லாஹ் பகிரங்கப்படுத்தாது. ஆனால் அந்த செய்தியை அனுப்பியவரிடம் இதுபற்றிய விளக்கம் கோரப்படும்.
பிற்குறிப்பு - இங்கு சுட்டிக்காட்டப்படும் செய்தியை அனுப்பிவைத்தவரின் பெயர் விபரங்களை உயிரே போனாலும் ஜப்னா முஸ்லிம் இணையம் இன்ஷா அல்லாஹ் பகிரங்கப்படுத்தாது. ஆனால் அந்த செய்தியை அனுப்பியவரிடம் இதுபற்றிய விளக்கம் கோரப்படும்.
உயிருள்ள இணையத்தளம் ☺
ReplyDeleteசகோதரர் சஹ்லான்: அல்லாஹ்விற்காக சுஜூது செய்யும் விரிப்பில் ஏன் போலியான ரெஜிபோம் கேக் அலங்காரம்.இது வீண்விரயமில்லையா? அல்லது நீங்கள் வேண்டுமென்றே உண்மையை மறைக்கப் பார்க்கிறீர்களா? உங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிவாயலில் உங்களில் இருந்தும் ஒருவர்தானே இதனை ஊடகத்துக்கு வீண் பகட்டுப் பெருமைக்காக கசிந்திருக்கலாம்.இறுதியில் வேலியே பயிரை மேய்ந்த கதியானதோ?
ReplyDeleteநீங்கள் ஜப்னா முஸ்லிமை குறைகூறுவதை நிறுத்தி விட்டு, போலியான குருட்டுக் கொள்கைகளை தூக்கி எறிந்துவிட்டு நிஜமான ஏகத்துவக் கொள்கையின் பால் திரும்புங்கள்.
Rauf enkira kallanukku ithu thevaya. Avar valiyullah endru avare sollikondu oora ematri polappu nadathura kalla kumpal.....
ReplyDeleteennumada entha raufai nampikkondu erukkinreergal muddapasangala
ReplyDeleteபொய் ச்செய்தி தந்தவரை உயிரே போனாலும் காட்டிக்கொடுக்காது ஜ.மு.!! நல்லா இருக்கய்யா உங்கள் ஊடக தர்மம்!
ReplyDeleteதானும் வழிகெட்டு மற்றுமொரு கூட்டத்தையும் வழிகெடுத்த முர்தத்துகள்.இவர்களுக்கு அதிசங்கையும் மதிப்பும் யாரும் கொடுக்கவில்லை குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் எதிராக நடக்கும் அபூஜாஹிலின் சந்ததிகளுக்கு என்ன மரியாதை
ReplyDeleteபெரும்பாளான முஸ்லிம்கள் என்று சொல்ல வேண்டாம் முஸ்லிம்கள் அல்லாஹ்வுக்கு இணை வைக்கப்பட மாட்டாா்கள்
ReplyDeleteஎன்னது அதிசங்கைகுரிய வா? யாருக்கு யாரு சங்க? முர்தத் காபிர்கள். எங்களின் சங்கை, அதிசங்கை எல்லாம் அல்லாஹ்ஹூக்கு மட்டும்தான். கஞ்சா மஸ்தானுக்கு எல்லாம் இல்லை. காத்தான்குடி கஞ்சா மஸ்தான் என்றைக்கும் சங்கைக்குரியவாராக ஆக முடியாது.
ReplyDeleteஎன்னது நாயகமும் வலியுல்லாஹ்வும் நீண்ட ஆயுலும் உயிர் கொடுத்த அல்லாஹ்விற்கு தெரியும் அவர் உயிர் எப்போது எந்த நேரத்தில் எடுக்கப்படும் அவர் இந்த உலகத்திற்கே உத்தமரானாலும் அந்த நிமிடம் நீடிக்காது என்பதும் தெரிந்து இவரை பின்தொடரும் சகோதரர்கள் செய்யும் இந்த அன்னதான நிகழ்வுகள் யார் செய்வார்கள் என்பதை இன்னுமா புரியாமல் இருக்கின்றார்கள்....
ReplyDeleteஅதி சங்கைக்குரிய ?? மற்றது ஆன்மீக தந்தையா? அவரைப்பின்பற்றும் பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்களின் மனதை புன்படுத்தும் விதமா???
ReplyDeleteஅல்லாஹ்விக்கே இனைவைக்கும் , ரஸூல் (ஸல்) கூரியவற்றிற்கு முற்றிலும் எதிராக ( எல்லாம் அல்லாஹ் கொள்கை) நடக்கும் உங்களைப்போன்றவர்களுக்கு முஸ்லிம் என்று சொல்லிக்கொள்ளவே அருகதையில்லை!!!!
Keep it aside your 72 feet cake business, the words you use to describe your leader is almost equating to level of Anbiyya.Further, this kind of Thareeqah business is way far from the true practice of our Rasool. Your Aqeedah- Wahdathul Wujooh- allah is everywhere, Allah is in urine, pee and poo- is nonsense and garbage. Correct your self Maulana Sahib.
ReplyDeleteஅல்லாஹ்வுக்கு மற்றும் தலைவணங்கவும்
ReplyDeleteஅப்துர்றஊப் மௌலவி யார்?
பொய் செய்தி தந்தவரை உயிரே போனாலும் காட்டிக்கொடுக்காது ஜ.மு.!! நல்லா இருக்கய்யா உங்கள் ஊடக தர்மம்!
ReplyDeleteCelebrating BIRTH DAY or Remembering BIRTH Day.. is the SUNNAH of FIRAWN who 1st introduced to the world as per the history.
ReplyDeleteSo who ever celebrate brith day for whom ever it is ... they are followng the way of FIRAWN who is against to Allah and his religion.
So not only RAUF and his followers... who ever celebrate BIRTH DAY even MEELAD VILAA.. They are the followers of FIRAWAN.
OUR NABI or SAHAABA did not show us this BIRTH DAY Celebration.
May Allah Guide all of us in correct path
ulahilullah aththanai ketta vaarthaum unakkum unathu kadavulum aana pancha parathesi raoof kku kaanikkai....
ReplyDelete