பிறந்த நாளுக்காக நடு வீதியில் கொட்டகை - பொலிஸாரும், அதிகாரிகளும் வேடிக்கை பார்க்கிறார்களா..??
-பாறுக் ஷிஹான்-
பிறந்த நாள் நிகழ்வை கொண்டாடுவதற்காக வீதிகளில் தற்காலிக கொட்டகை போடும் செயற்பாடு அண்மைக்காலமாக நடைபெற்று வருகின்றது.
தற்போது யாழ்ப்பாணம் நாவாந்துறை இணைக்கின்ற கல்லூரி வீதியில் முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியில் இரு நாள் பிறந்த தின நிகழ்விற்காக வீதிக்கு குறுக்காக ஒரு குடும்பம் கொட்டகை நிர்மாணித்ள்ளது.
வீதியால் பயணம் மேற்கொள்ள வருகின்ற வாகனங்கள் மாற்று வழியால் பயணம் செய்யுமாறு அவ்விடத்தில் உள்ளவர்களால் பணிக்கப்படுகின்றனர்.
அத்துடன் ஜூம்மா கடமைக்காக வந்தவர்களை கூட திரும்பி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.
அதிகமாக போக்குவரத்து செய்யும் வீதிகளில் இவ்வாறான தனியார் நிகழ்வுகளை எவ்வித முன்னனுமதி இன்றி மேற்கொள்ளப்படுகின்றது.
தற்போது யாழ்ப்பாணம் நாவாந்துறை இணைக்கின்ற கல்லூரி வீதியில் இரு நாள் பிறந்த தின நிகழ்விற்காக வீதிக்கு குறுக்காக ஒரு குடும்பம் கொட்டகை நிர்மாணித்து அராஜகம் நடாத்துகிறது.
வீதியால் பயணம் மேற்கொள்ள வருகின்ற வாகனங்கள் மாற்று வழியால் பயணம் செய்யுமாறு அவ்விடத்தில் உள்ளவர்களால் பணிக்கப்படுகின்றனர்.
இவ்வாறான சட்டவிரோதமான செயற்பாடுகளை பொலிஸார் உட்பட உரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளாது வேடிக்கை பார்க்கின்றனர்.
எனவே இவ்வாறான விழாக்களை பெரும் எடுப்பில் மேற்கொள்பவர்கள் வாடகை மண்டபங்களை அமர்த்தி தங்களது விழாக்களை கொண்டாட வேண்டும்.பொதுவான வீதியை எவ்வித அனுமதி இன்றி அடைத்து அடாவடி செய்வது பொதுப்போக்குவரத்திற்கு இடைஞ்சல் விளைவிப்பதாகும்.
Either the person who does that is extremely stupid or the person who doesn't wanna say anything is extremely stupid.
ReplyDeleteEven if you hit someone by a vehicle they cannot do anything cos they were sitting in the middle of the road without taking any approval.
பட்டால் தான் தெரியும் முட்டாளுக்கு! ஒரு கூட்டத்தில் மோதினால் இனிமேல் எவரும் அவ்வாறு பாதை நடுவில் அமரமாட்டார்கள்.