நாமல் சிக்குகிறார்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவும் பண சலவை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படலாம் என தெரியவருகிறது.
நாமல் ராஜபக்ச, கொழும்பு திம்பிரிகஸ்யாய, கவர் வீதியில் 5 நிறுவனங்களை நடத்தி வருகிறார். இந்த நிறுவனங்களை ஆரம்பிக்க பணம் எப்படி கிடைத்தது என விசாரணை நடத்திய போது, சஜின் வாஸ் குணவர்தன மற்றும் நிமல் பெரேரா ஆகிய வர்த்தகர்களிடம் இருந்து இந்த பணம் கிடைத்ததாக நாமல் கூறியிருந்தார்.
எனினும் தாம் நாமலுக்கு பணம் கொடுத்ததாக கூறப்படுவதை இரண்டு பேரும் மறுத்துள்ளனர். இதனால், நாமல் ராஜபக்சவும் பண சலவை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
றகர் வீரர் தாஜூடீன் கொலை தொடர்பிலும் நாமல் ராஜபக்ச மீது குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது.
முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாவலர்களின் ஒருவரான திஸ்ஸ விமலசேன, இந்த கொலையில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதாக விசாரணை நடத்திய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நாமல் ராஜபக்சவின் சகோதரரான யோஷித்த ராஜபக்சவும் பண சலவை சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்தை ஆரம்பிக்க முதலீடு செய்யப்பட்ட பணம் கிடைத்த விதத்தை வெளிப்படுத்த தவறியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது கைது கைது! இது உங்களுக்கே நல்லதா? பொய்யிலையே திலைக்கிறீர்கள்!
ReplyDeleteDramaக்கள் பார்த்து சலித்துப் போயுள்ளோம்!
ReplyDelete