நாடு திரும்பினார் மைத்திரி, ரணிலுடன் அவசர சந்திப்பு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் ஐரோப்பாவுக்கான தமது விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளனர்.
இன்று காலை 07.15 அளவில் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் நாட்டை வந்தடைந்ததாக, எமது விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 15ம் திகதி ஐரோப்பாவுக்கான விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி ஜேர்மன் மற்றும் ஆஸ்திரியாவுக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
2
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் விஷேட சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை இந்த விசேட சந்திப்பு இடம்பெறும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் நாடாளுமன்றில் சுயாதீனமாக இயங்குவதற்கு அனுமதித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.
அத்துடன், முக்கியமான சில அரசியல் காரணிகள் தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கவனம்செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னதாக கூட்டு எதிர்க்கட்சியினரின் பிரச்சினைக்கு ஜனாதிபதியுடன் கலந்து ஆலோசித்து தீர்வு பெற்றுக்கொடுப்பதாக பிரதமர் உறுதியளித்திருந்தார்.
இதேவேளை, எதிர்வரும் 23ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment