‘பொதுமக்கள் கைகளில், துப்பாக்கிகள் இருக்க வேண்டும்’ - டொனால் ட்ரம்ப்
தீவிரவாதிகளிடமிருந்து பொதுமக்களை காப்பாற்றிக்கொள்ள அவர்களின் கைகளில் துப்பாக்கியை கொடுங்கள் என பிரான்ஸ் அரசுக்கு அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரான டொனால் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால் ட்ரம்ப் அண்மையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Valleurs Actuelles என்ற பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ளார்.
அப்போது ட்ரம்ப் பேசியபோது, ‘முன்பு ஒரு காலத்தில் பிரான்ஸ் இருந்தது போல் இப்போது இல்லை. நிறைய மாற்றங்களை அந்நாடு சந்தித்து வருகிறது.
கடந்த நவம்பர் 13ம் திகதி பாரீஸில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் மிகக் கொடூரமானது.
இந்த தாக்குதல் மூலம் ‘பொதுமக்கள் கைகளில் துப்பாக்கிகள் இருக்க வேண்டும்’ என்ற உண்மையை பிரான்ஸ் ஆட்சியாளர்கள் புரிந்திருப்பார்கள்.
இசை அரங்கில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, அங்குள்ள பொதுமக்களிடம் துப்பாக்கி இருந்திருந்தால், இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்குமா?
என்னிடம் எப்போதும் ஒரு துப்பாக்கி இருக்கிறது. நான் அந்த இசை அரங்கில் இருந்திருந்தால், தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி இருப்பேன்.
தீவிரவாதிகள் என்னை கொல்வதற்கு முன்னதாக, பல தீவிரவாதிகளை நான் சாய்திருப்பேன்.
பிரான்ஸில் வசிக்கவே அச்சமாக உள்ளது அங்குள்ள என என்னுடைய நண்பர்கள் அடிக்கடி கூறுகிறார்கள்.
எனவே, குடிமக்களை பாதுகாக்கும் வகையில் துப்பாக்கியை பயன்படுத்த அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பதே தன்னுடைய கருத்தாக உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
Post a Comment