Header Ads



வீறாப்பு வெறிகளை ஓரத்தில் வைத்துவிட்டு, முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்புக்காக இணைய வேண்டும்

நாடு மிகவும் முக்கியமான கட்டத்தில் இருக்கும் இன்றைய சூழ் நிலையில் முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டமைப்பாக செயற்பட முன்வராமை முஸ்லிம் சமூகத்துக்கு செய்யும் பாரிய துரோகமாகும் என உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

அவர் மேலம் தெரிவித்ததாவது,

அரசியல் யாப்பு திருத்தம், இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சி, தேர்தல் முறை மாற்றம், இந்திய வெளிநாட்டமைச்சர் வருகை, ஐ நா மனித உரிமை ஆணையாளர் வருகை என நாடு மிக முக்கியமான கட்டங்களை சந்தித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையிலும் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் கட்சிகள் ஒன்றுபடாமல் ஆளுக்கொரு கருத்தை முன் வைத்துக்கொண்டிருக்கும் பரிதாப நிலையை காண்கிறோம்.

முஸ்லிம் கட்சிகள் ஒன்று பட்டு முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்பாக அல்லது முஸ்லிம் மக்கள் கூட்டமைப்பாக இயங்க முன்வர வேண்டும் என்பதை கடந்த ஒன்பது வருடங்களாக நாம் அறை கூவல் விடுத்து வருகிறோம். இது விடயத்தில் அ இ மக்கள் காங்கிரசின் தலைவர் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அண்மையில் தான், ரஊப் ஹக்கீம், அதாவுள்ளா போன்றவர்களுடன் சமூகத்தின் நன்மைக்காக இணைந்து செயற்பட தயார் என கூறியிருந்தார். அவரது இந்தக்கூற்று அவரது சமூக அக்கறையை காட்டும் அதே வேளை அவரது உளக்கிடக்கையை உணரக்கூடிய நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இல்லாமல் இருப்பது கவலை தருகிறது.

    களத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத முஸ்லிம் கட்சிகளில் சில கட்சிகளாவது ஒன்றிணைந்து ஒன்று பட்ட தீர்வுகளையாவது முன் வைக்க வேண்டிய அவசியமும் அவசரமம் இன்று ஏற்பட்டுள்ளது. இல்லாவிடில் கடந்த காலத்தில் விடுதலை புலிகளும் அரசாங்கமும் முஸ்லிம் கட்சிகள் ஒன்று பட்டு வந்தால்தான் அவர்கள் கருத்தை ஏற்போம் எனக்கூறியது போன்று இன்றும் தேசிய, சர்வதேச சகதிகள் கூறி முஸ்லிம்களின் பிரச்சினைகள் ஆலோசனைகள் ஓரங்கட்டப்படலாம்.

ஆகவே முஸ்லிம் அரசியல் சக்திகள் தமது சுயநலன்களையும், வீறாப்பு வெறிகளையும் ஓரத்தில் வைத்து விட்டு உடனடியாக முஸ்லிம் கட்சிகளின் கூட்டமைப்புக்காக ஒன்றிணைய வேண்டும் என கூறுகிறோம். இத்தகைய கூட்டமைப்புக்குரிய வேலைத்திட்டங்களை ஏற்கனவே உலமா கட்சி செய்து வருகிறது. ஆனாலும் மு. கா போன்ற பெரிய கட்சிகளின் ஆதரவற்ற நிலை கவலை தருகிறது என கலாநிதி முபாறக் மௌலவி தெரிவித்தார். 

3 comments:

  1. முபாறக்மௌலவி அவர்களே உங்கள் அறைகூவல் ஏற்புடையதாய் இருந்தாலும் மாபெரும் கட்சியின் தலமைத்துவத்தினை ஏற்று வழிநடாத்தும் தலைவருக்கு இதைச்சொல்லி விளங்கிக்கொள்ளும் அளவிற்கு அவர் என்ன குழந்தையா?அடிக்கடி உங்கள் ஆதங்கம் இவரைச் சாடியிருப்பது உன்மை ஆனால் நீங்கள் சொல்லும் வறலாற்றுத்தவரினை அப்படி அவர்விட்டுவிட்டு முஸ்லிம் சமூகத்திற்கு முன் தலை நீட்டுவதைவிட தற்கொலை செய்வது மேலானது என்பதை சொல்லித்தெரிந்து கொள்ளுமலவிற்கு அவர் சானக்கியமற்ற தலைவர் அல்ல உங்களைப்போன்று ஆதங்கம் எங்களைப்போன்ற மக்களிடத்திலும் உள்ளது எனவே சிலவேலை காலம் கடந்து நீங்கள் அவர்சார்பாகவும் பேசும் நேரம்வரலாம் அப்போது நாங்கள் அரசியலில் இதெல்லாம் சகஜம் என்று சொல்வதை தவிற வேறு வார்த்தைகள் இருக்காது...பொருத்திருப்போம்....

    ReplyDelete
  2. The ulama party is doing political business. How can you for benefits of Muslim community?

    ReplyDelete
  3. இவனுகள் ஒருகாளத்திலும் ஒன்றுசேர மாட்டானுகள்! சமீகத் துரோகிகள்!

    ReplyDelete

Powered by Blogger.