தனி மாகாணமே முஸ்லிம்களின் பிரச்சினைக்கு, தீர்வாக அமையும் - ஹசன் அலி
முஸ்லிம்கள் வடக்கு கிழக்கில் தமக்கென ஓர் தனி நாடு வேண்டுமெனக் கேட்கவில்லை. வடக்கு– கிழக்கு இணைக்கப்பட்டால் அதற்குள் தமக்கு நிலத் தொடர்பற்ற தனி முஸ்லிம் மாகாணம் வழங்கப்பட வேண்டுமென்றே கேட்கிறார்கள். இதுவே மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரபின் கோரிக்கையாகவும் இருந்தது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசன் அலி தெரிவித்தார்.
அரசியலமைப்புச் சீர்திருத்தத்தில் இது உள்வாங்கப்பட வேண்டுமெனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடும் இதுவே எனவும் கூறினார். இனப்பிரச்சினைக்கான தீர்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
‘இனப்பிரச்சினைக்கான தீர்வில் வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டு தமிழர்களுக்கு தனி அலகு வழங்கப்படுவதாயிருந்தால் அதற்குள் முஸ்லிம்களுக்கென்று நிலத் தொடர்பற்ற தனி முஸ்லிம் மாகாணம் உருவாக்கப்பட வேண்டும்.
அவ்வாறு தனி மாகாணம் வழங்கப்பட்டாலேயே முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு அது தீர்வாக அமையும். இப்போதுள்ள கிழக்கு மாகாண சபையில் முதலமைச்சராக ஒரு முஸ்லிம் இருந்தாலும் இது எமக்குரியதல்ல.
கிழக்கில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வருவதென்றால் தமிழ் மக்களோடும் சிங்கள மக்களோடும் சண்டை பிடிக்க வேண்டியுள்ளது.
முஸ்லிம்களுக்கென்று ஒரு நிரந்தர முதலமைச்சர் பெற்றுக் கொள்வதாயிருந்தால் முஸ்லிம்களுக்கான தனியான மாகாண சபையினாலேயே அது முடியுமாக இருக்கும்.
வடக்கு கிழக்கில் முஸ்லிம்களுக்கு ஒரு தனி அலகாக முஸ்லிம் மாகாணம் வழங்கப்பட்டால் வடக்கு கிழக்கு வெளியே உள்ள முஸ்லிம்களின் நிலை என்ன என்று சிலர் வினவுகிறார்கள்.
வட– கிழக்கில் நிறுவப்படும் முஸ்லிம்களுக்கான மாகாண சபை வட கிழக்குக்கு வெளியே இருக்கும் முஸ்லிம்களுக்காக குரல் எழுப்பும்.
இப்போது வடக்கு கிழக்குக்கு வெளியே உள்ள முஸ்லிம்கள் பற்றி கவலைப்படும் வட கிழக்கிற்கு வெளியே உள்ள முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இது பற்றி ஏற்கனவே சிந்தித்திருக்க வேண்டும்.
முன்னாள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் அறிக்கைகளைச் சமர்ப்பித்திருக்க வேண்டும்.
ஆனால் அவர்கள் மௌனமாக இருந்து விட்டார்கள். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு கிழக்கு முஸ்லிம்களை மாத்திரமல்ல நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்களின் நலனுக்காக குரல் கொடுக்கும் என்றார்.
-ARA.Fareel-
Siru.panmai.makkal.ottrumaiyaka.erunthu.kettalthan.north.and.est.kitakkum.muslimkal.thani.alaku.kettal.singala.arasankam.oruththarukkum.ontrume.kidayathu.kitayakka.muthale.eppadi.sandai.pottal.onrume.kidayathu.indiya.tamil.nattil.ulla.muslimkal.tamilarkalodu.sernthu.valavendum.ontru.pattal.undu.valvu
ReplyDeleteமத சார்பு அற்ற இலங்கைக்குறிய கலாச்சாரம் நாம் இலங்கையர் என்பன மக்களிடம் உருவாகும் பொழுது தனித்துவம் தேவை இல்லை
ReplyDelete