Header Ads



இப்படி செய்வது நியாயமாகுமா..? - விக்டர் அய்வன்

(விக்டர் அய்வன்)

தமிழில் ஏ.ஆர்.எம் இனாஸ்

“30 வருட கொடூர யுத்தத்திலிருந்தும் பயங்கரவாதி பிரபாகரினிடமிருந்தும் இந்த நாட்டை மீட்டெடுத்த எமது குடும்பத்தினருக்கு இந்த அரசு இப்படியான அநியாயஙங்களை செய்வது முறையாகுமா?”

மகிந்த ராஜபக்சவை போன்றே அவரது சகோதரர் கோதபயவும் நாட்டு மக்களிடம் கேட்கும் கேள்வி இது தான்.

நிச்சயமாக தீவிரவாதி பிரபாகரனின் பயங்கரவாதத்திலிருந்து இந்நாட்டை விடுவிக்க மகிந்த,கோதாபய இருவரும் செய்த பணி மகத்தானது. அதுமட்டுமல்லாமல் நாட்டின் வீதிகளை நெடுஞ்சாலைகளை நவீனமயப்படுத்துவதில் பாரிய ஊழல்கள் இடம்பெற்றிருந்த போதும் சேர் எட்வட் பான்ஸின் காலத்தின் பின்னர் இலங்கையின் வீதிகள் நெடுஞ்சாலைகளை நவீனமயப்படுத்திய பெருமை,கௌரவம் மகிந்த ராஜபக்சவுக்குரியதே. இவ்வாறு இந்நாட்டுக்கு பாரியளவில் சேவைகள் செய்த ஆட்சியாளன் ஒருவரின் மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள், உறவினர்கள் நிதி மோசடி மற்றும் பாரதூரமான குற்றங்கள் செய்திருந்தால் அவர்கள் தொடர்பில் நாடு அல்லது அரசு அவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?

எனது தனிப்பட்ட கருத்தை பொருத்தவரையில் அவர்கள் இந்த நாட்டுக்கு செய்த அளப்பரிய சேவைகளுக்குரிய கௌரவத்தை அவர்களுக்கு வழங்குவதோடு அவர்கள் செய்த குற்றங்களுக்காக அவர்ளுக்குரிய பொருத்தமான தண்டனையும் எந்தவித தயக்கமுமின்றி வழங்கப்பட வேண்டும்.

கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணை ஒருவர் தனது உயிரை பணயமாக வைத்து காப்பாற்றியதற்காக அப்பெண்ணை கற்பழிக்கும் உரிமையை அப்பெண்ணை காப்பாற்றியவன் பெறுவதில்லை.

ஜனாதிபதி நாட்டின் உத்தியோகபூர்வ பொறுப்புதாரர். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படும் சந்தர்பங்களில் தனது உயிரை பணயம் வைத்தாவது நாட்டை காப்பாற்ற வேண்டியது பொறுப்புதாரரின் கடமை. நாட்டின் பொறுப்புதாரர் ஜனாதிபதி தனது உயிரை பணயம் வைத்து நாட்டை காப்பாற்றி ஆற்றிய சேவைக்காக நாட்டின் பொதுச் சொத்துக்களை சுரண்டுவதற்கான, கொள்ளையடிப்பதற்கான உரிமை அவருக்கு வழங்கப்படுவதில்லை.

கடலில் மூழ்கும் பெண்ணை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய வீரனின் வீரச் செயலுக்காக அவன் தங்க பதக்கம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட வேண்டும். அதே போல் கடலிலிருந்து காப்பாற்றிய பெண்ணை பலாத்காரமாக கற்பழித்ததற்கு அவனுக்குரிய அதாவது அவன் செய்த குற்றத்திற்குரிய தண்டனையும் அவனுக்கு முறையாக வழங்கப்பட வேண்டும்.

(Ravaya)
(inasinaas@gmail.com)

3 comments:

  1. Well said. Mr Victor.what an amazing example you gave.

    ReplyDelete
  2. Very nice Instance Mr Victor. Mr My3 and Ranil, do not hesitate to file case againts Mahinta and co.

    ReplyDelete
  3. victorநீங்கள் கேட்பது முற்றிலும் சரியான கேள்வி ஆனால் நாட்டில் 30வருடகால இருல்சூழ்ந்த யுகத்தை முடிவுக்குகொண்டுவந்தவர் அது எதனால் ஆரம்மிக்கப்பட்டது அதற்கான தீர்வு என்ன என்பதை மறந்துவிட்டது மட்டுமல்லாது மீண்டும் முஸ்லிம் இனத்தோடு முரன்படும் இனவாத கருத்துக்களையும் பிறட்சனைகளையும் சிலர் ஆரம்பித்து அட்டூழியம் செய்தபோதும் கூட 30வருடகால யுகம் நினைவுக்கு வரவில்லையே...அழுக்கான சுவருக்கு வர்ணம் பூசிவிட்டோம் அடுதபக்கம் அழுக்காகிக்கொண்டிருக்கார்கள் என்றால் ஆயிரம்தடவை வர்ணம்பூசினாலும் பலன்கிடையாதே.....அழுக்கு வந்துகொண்டேதான் இருக்கும்

    ReplyDelete

Powered by Blogger.